சென்னை, நவ. 27- தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (27.11.2023) காலை சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் 52 இலட் சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள மேனாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களின் முழு உருவச் சிலையை திறந்து வைத்தார். விழாவில் சிறப்பு விருந்தினர். உத்தரப்பிரதேச மாநில மேனாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், வி.பி. சிங் அவர்களின் துணைவியார் சீதா குமாரி, மகன் அஜயா சிங் மற் றும் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் திறந்து வைத் தார்.
புகழ்சால் பெருந்தகையாளர் கள், தமிழ்மொழியின் வளர்ச் சிக்கு அரும்பாடுபட்டு தமிழ் நாட்டிற்குப் பெருமைத் தேடித் தந்த அறிஞர் பெருமக்கள், சமூக நீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத் திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையி லும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங் கள், உருவச் சிலைகள், அரங் கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டத்தில், மிகப்பெரிய ஜமீன்தாரரான ராஜா தயா பகவதி பிரதாப் சிங் அவர்களுக்கு மகனாகப் பிறந் தவர் விஸ்வநாத் பிரதாப் சிங் என்ற வி.பி. சிங். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே காந்திய இயக்கத்தில் ஈடுபட்டார்; சர் வோதய சமாஜில் இணைந்தார், பூமிதான இயக்கத்தில் பங்கெ டுத்தார், தனது நிலங்களையே கொடையாக வழங்கினார்.
1969-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். பின்னர் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராகவும், ஒன்றிய வர்த்தக அமைச்சராகவும், வெளி யுறவுத் துறை அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும், பாதுகாப் புத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
தேசிய முன்னணியை உரு வாக்கி 1989-ஆம் ஆண்டு இந்தி யாவின் பிரதமராக பதவி வகித் தார்.
27 விழுக்காடு இடஒதுக்கீடு
இந்திய அரசமைப்புச் சட் டம் உருவாக்கப்பட்டபோது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங் குடியினருக்கு ஒன்றிய அரசுப் பணியிடங்களில் தனி இட ஒதுக்கீடு தரப்பட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு தரப்பட வில்லை. இதனை வழங்குவதற் காக அமைக்கப்பட்ட இரண்டா வது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்தான் பி.பி. மண்டல் தலைமையிலான ஆணையம். சமூகரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப் படும் சமூகத்துக்கு, பி.பி. மண் டல் பரிந்துரையின் கீழ் ஒன்றிய அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற உத்தரவை அமல்படுத்தியவர் வி.பி.சிங் ஆவார்.
வி.பி. சிங் பதவியிலிருந்த 11 மாத காலத்தில், பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத் திற்கான தொடக்கப் புள்ளி, வேலை உரிமையை அரசியல் சாசன உரிமை ஆக்கியது, தேர் தல் சீர்திருத்தங்கள், மாநிலங்க ளுக்கிடையிலான கவுன்சில், தேசியப் பாதுகாப்புக் குழு, உழ வர்கள் பிரச்சினையைத் தீர்க்க மூன்று குழுக்கள், டில்லி குடி சைப் பகுதி மக்களுக்கு வாழ் விடங்கள், அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (விஸிறி) அச்சிடு தல் போன்றவற்றை செயல்படுத் திய மாபெரும் சாதனையாளர் ஆவார்.
விமான நிலையத்துக்குப்
பெயர்
தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப் பிரச்சினையான காவிரி நீருக்காக நடுவர் மன்ற ஆணை யத்தை அமைத்துத் தந்த்தோடு, சென்னையில் அமைந்துள்ள உள்நாட்டு விமான நிலையத் திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு அறிஞர் அண்ணாவின் பெயரையும் சூட் டிய பெருமைக்குரியவர் வி.பி. சிங்.
உயர்வர்க்கத்தில் பிறந்தா லும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கா கச் சிந்தித்தவர், எத்தனை உயர் பதவி வகித்தாலும் கொள்கையை விட்டுத் தராதவர் வி.பி. சிங்.
இத்தகைய ஒப்பற்ற தலை வரான வி.பி.சிங் அவர்களின் நினைவைப் போற்றும் வகையி லும், அவருக்குத் தமிழ்ச் சமுதா யத்தின் நன்றியைத் தெரிவிக்கும் வகையிலும் தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் 20.4.2023 அன்று சட்டப்பேரவை விதி 110இன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், சமூகநீதிக் காவலர், மேனாள் இந்தியப் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் நினை வைப் போற்றும் வகையில், சென் னையில் அவரது முழு உருவ கம்பீரச் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் 52 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் நிறுவப் பட்டுள்ள மேனாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களின் முழு உரு வச் சிலையை சிறப்பு விருந்தி னரான உத்தரப்பிரதேச மாநில மேனாள் முதலமைச்சர் அகி லேஷ் யாதவ், வி.பி. சிங் அவர்க ளின் துணைவியார் சீதா குமாரி, மகன் அஜயா சிங் மற்றும் அவ ரது குடும்பத்தினர் முன்னிலை யில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத் தார்.
இந்நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட் டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச் சர் மு.பெ. சாமிநாதன், அமைச் சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தர மோகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மருத்துவர் இரா. செல்வராஜ், செய்தி மக் கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண் டனர்.