குன்றக்குடி, ஜூலை 11 தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூறாவது பிறந்தநாளான இன்று (11.7.2024) குன்றக்குடியில் உள்ள அவரது சிலைக்கு கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்ட தி.க.காப்பாளர் சாமி.திராவிடமணி தலைமையில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முன்னிலையில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கரு.அசோகன்,மாவட்ட துணை செயலாளர் இ.ப.பழனிவேலு, கல்லல் ஒன்றிய தலைவர் பலவான்குடி ஆ.சுப்பையா, கல்லல் ஒன்றிய செயலாளர் கொரட்டி வீ.பாலு, மாவட்ட ப.க.தலைவர் எஸ்.முழுமதி, தி.தொ.ச. மாவட்ட தலைவர் சூரிய மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் தி.செயலெட்சுமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தி.புரூனோ என்னாரெசு, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தி அனைவர் முன்னிலையிலும் படிக்கப்பட்டு படிகள் எடுத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.
தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூறாவது பிறந்தநாள் கழகத்தின் சார்பில் மரியாதை
Leave a Comment