சென்னை, ஜூலை 11- பொது மக்கள் பார்க்கும் வகையில் காவல் துறை அதிகாரிகள் நாள்தோறும் இருமுறை ரோந்து சுற்றி வர வேண்டும் என காவல்துறையினருக்கு சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப் பித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த 5ஆம் தேதி அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டி படு கொலை செய்யப்பட்டார். உணவு டெலிவெரி செய்யும் ஊழியர்கள் போல் உடை அணிந்து வந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது.
இந்த நிகழ்வு சென்னை மட்டும் அல்லாமல் தமிழ்நாடு முழுவ தும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத் தியது. சட்டம் – ஒழுங்கு, காவல் துறையினரின் கட்டுக்குள் இல்லை, ரவுடிகள் மற்றும் கூலிப்படையினரின் ஆதிக்கம் அதிகளவில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், காவல் துறை நம்பிக்கையை இழந்து விட்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு புதிய காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டார். இதேபோல் தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு கூடுதல் தலைமை இயக்குநராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.
இதையடுத்து, இருவரும் ரவுடிகள் ஒழிப்பு பணியை வேகப்படுத்தி உள்ளனர். குறிப்பாக தமிழ்நாடு முழுவ தும் உள்ள ரவுடிகளை கணக்கெடுத்து அவர்களின் செயல்பாடுகளை முற்றி லும் ஒழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
சென்னையை பொறுத்தவரை காவல் ஆணையரான அருண் கடந்த 2 நாள்களாக காவல்துறை அதிகாரிக ளுடன் தீவிர ஆலோசனையில் ஈடு பட்டார். இதன் தொடர்ச்சியாக காவல் துறை அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, சென்னை காவல் மாவட்டத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு தொடர்புடைய 2 கூடுதல் காவல் ஆணையர்கள், 4 இணை ஆணையர்கள், 12 துணை ஆணை யர்கள், 48 உதவி ஆணையர்கள் காவல் துறையினரின் ரோந்துப் பணிகளை நேரடியாக மேற்கொள்ள வேண்டும்.
மேலும் இவர்களும் ரோந்துப் பணிக்கு செல்ல வேண்டும். குறிப்பாக இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் நாள்தோறும் இரு வேளை ரோந்து செல்ல வேண்டும். காவல் துறை தங்கள் காவல் வாக னங்களில் மின் விளக்குகளை எரிய விட்டவாறு மக்கள் பார்க்கும் வகையில் ரோந்துப் பணி செல்ல வேண்டும்.
இதன் மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு உறுதி அளிப்பதோடு, சமூக விரோதிகளுக்கு அச்சம் ஏற்படும். எனவே, இதை காவல்துறை கண்டிப்புடன் செய்ய வேண்டும் என காவல் ஆணையர் அருண் உத்தர விட்டுள்ளார். பணியில் சுணக்கம் காட்டும் காவல்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டும் அல்லா மல் பணியிடை நீக்கம் செய்யப்படவும் வாய்ப்புள்ளது என காவல் ஆணையர் கடுமையாக எச்சரித்துள்ளார்.