கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

Viduthalai
2 Min Read

11.7.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* விவாகரத்தான முஸ்லிம் பெண்கள் வாழ்வியற் கொடை பெற உரிமை உண்டு என அதிரடியாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
* மராத்தா இட ஒதுக்கீடு பிரச்சினை; மகாராட்டிரா சட்டமன்றத்தில் ரகளை. மராத்தா – ஓபிசி பிரிவினரி டையே பிளவு ஏற்படுத்த ஷிண்டே அரசு முயற்சி என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஒரே பாலின திருமண வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா விலகல்
* மாநிலத்தில் தங்கள் அனுமதியின்றி சி.பி.அய். விசாரிக் கக் கூடாது என மேற்கு வங்க அரசு வழக்குத் தொடுக்க உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும் போது அடிக்கடி குறுக்கிடுவதாக அவைத்தலைவர் ஜக்தீப் தங்கரிடம் கபில் சிபல் கண்டனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* திருமண விழாவில் மணமகள் மேடையில் இருப்பதென்பது மெல்ல மெல்ல கேரளாவில் உள்ள முஸ்லீம் சமூகத்தினரிடையே ஒரு ‘ட்ரெண்டாகி’ வருகிறது. அங்கு வழக்கமாக மணமகன் மற்றும் மணமகளின் தந்தையால் மணவிழா கொண்டாடப் படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக வடக்கு கேரளா வில் நடந்த இரண்டு திருமணங்களில் மணப்பெண்கள் மேடையில் வந்து அமர்ந்து கொண்டு பழைய பாரம்பரியத்தை உடைத்தெறிந்து உள்ளனர்.
தி இந்து:
* வரலாற்று ரீதியாக பாகுபாடு காட்டப்பட்ட சமூகக் குழுக்களின் பிரச்சினைகள் (அது ஜாதி, இனம், மதம், பாலினம், இயலாமை போன்றவை) குழு-அடையாளம் வாரியாக தரவுகளை சேகரிக்காமல் தீர்க்க முடியாது. அவ்வாறு செய்வது அடையாள அரசியலுக்கு சரணடைவது அல்ல, ஆனால் தகவலறிந்த கொள்கை உருவாக்கம் மற்றும் உள்ளடங்கிய வளர்ச்சிக்கான ஒரு முக்கிய படியாகும் என்கிறார் அசோக் வர்தன் ஷெட்டி, அய்.ஏ.எஸ்.
* கல்விக்கு எதிரான மனநிலை கொண்ட பாஜகவால் இளைஞர்களின் எதிர்காலம் பாழாகிறது: பொருளாதார மந்தநிலையின் பாதிப்பால், அய்.அய்.டி. முடித்த மாணவர்கள் 38 சதவீதம் பேருக்கு வேலை கிடைக்காத சூழல் என்று ராகுல் குற்றச்சாட்டு
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பதஞ்சலியின் உற்பத்தி உரிமங்களை உத்தரகாண்ட் அரசு ரத்து செய்ததன் காரணமாக பதஞ்சலி தனது 14 மருந்துப் பொருட்களை நிறுத்தியுள்ளது.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *