7 மாநிலங்களில் 13 தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, ஜூலை 10- பாஜக தலைமையிலான என்டிஏ கூட்ட ணிக்கும், எதிர்க்கட்சிகளின் இண் டியா கூட்டணிக்கும் இடையே மீண்டுமொரு பலப்பரீட்சை இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு உள் ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் அவ்விரு கூட் டணிகளும் போட்டியிட்டு தங்களது பலத்தை நிரூபிப்பதற்கு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. இதற்கு எந்த கூட்டணிக்கு அதிக பலன் கிடைத்தது என்பது ஜூலை 13ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண் ணிக்கையின் போது தெளிவாக தெரிந்துவிடும்.

மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச், ரணகாட் தக்சின் (எஸ்சி), பாக்தா (எஸ்சி), மணிக்தலா ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகள் இடைத் தேர்தலை சந்திக்கின்றன.

அதேபோன்று, பிகாரில் ரூபாலி, பஞ்சாபில் ஜலந்தர் மேற்கு, இமாச்சல பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர், நலகார்க், உத்தரா கண்டில் பத்ரிநாத், மங்களூரு, மத்திய பிரதேசத்தில் அமர்வாரா, தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி தொகு திக்கும் இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.

வேட்பாளர் மரணம் அல் லது பதவிவிலகியது போன்ற காரணங்க ளால் ஏற்பட்ட காலியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெறுகிற நான்கு தொகுதிகளில் 3 தொகுதிகளை கடந்த 2021 தேர்தலில் பாஜக கைப்பற்றியிருந்தது.

பிகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் அய்க்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது. பெரும்பான்மையான கங்கோடா சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்களை இவ்விரு கட்சிகளும் நிறுத்தியுள்ளன.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மங்களூரில், காங்கிரஸ் கட்சி காசி நிஜாமுதீனை நிறுத்தியுள்ளது, அவர் மூன்று முறை இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

உத்தராகண்ட் உருவாக்கப்பட் டதில் இருந்து மங்களூர் தொகுதியில் பாஜக இதுவரை வெற்றி பெற்ற தில்லை. அக்கட்சி கர்தார் சிங் பதானாவை களமிறக்கியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *