பெண் என்றால் பெருமை!

viduthalai
3 Min Read

‘‘உடைகளை அதன் நிறம் மற்றும் வடிவங்களை பார்த்துதான் நாம் தேர்வு செய்வது வழக்கம். சில சமயம் நம்மிடம் இருக்கும் நிறங்களிலேயே உடைகள் கண்களில் தென்படும். அல்லது நாம் செல்லும் கடைகளில் ஒரே நிற உடைகள் மட்டுமே விற்பனையில் இருக்கும். சில சமயம் நாம் ஒரு குறிப்பிட்ட நிறத்தில் உடையினை வாங்க வேண்டும் என்று கடைக்கு செல்வோம். ஆனால் அங்கு அந்த நிறம் இருக்காது. ஆனால் இன்று அப்படி இல்லை. நாம் விரும்பும் நிறங் களை நம்முடைய உடைகளில் கொண்டு வரலாம். அதுவும் எளிய டையிங் முறையில்’’ என்கிறார் க்ருத்தி சுதா. இவர் உடைகளில் சாயம் ேபாடுவது மட்டு மில்லாமல் பெயின்டிங் குறித்த பயிற்சி முகாம்களையும் சென்னை மற்றும் பெங்களூரில் நடத்தி வருகிறார்.

‘‘என்னுடைய பூர்வீகம் ராஜஸ்தான். பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில். படித்தது பெங்களூரில். நான் ஒரு ஆடைகள் வடிவமைப்பாளர். எனக்கு சிறுவயதிலிருந்தே கலை மற்றும் கை வினைப் பொருட்கள் மீது ஆர்வம் அதிகம். இதன் ஆரம்பமாக ஓவியம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். எனது ஆர்வத்தைப் பார்த்த எனது பெற்றோர் என்னை புதிய கலை வடிவங்களை கற்றுக் கொள்ள தூண்டினார்கள். என் அப்பா ஜவுளி சார்ந்த தொழில் செய்து வந்ததால், நான் துணிகளுக்கு நடுவேதான் வளர்ந்து வந்தேன். என்னுடைய துறையில் தொழில் பின்னணி உள்ளது. அந்த வகையில் வடிவமைப்பு மற்றும் ஆடைகள் மீது எனக்கு சிறிது நாட்டம் இருந்தது. 2018இல் 11ஆம் வகுப்பு படிக்கும் போது, ​​எனது கலைப்படைப்பைக் காண் பிக்க இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தொடங்கினேன்.

திரவக்கலை ஓவியம் (‘‘ப்ளூயிட் ஆர்ட்) மட்டுமில்லாமல், ரெசின் ஆர்ட் மற்றும் Tie – Dye குறித்து இலவசப் பட்டறைகளையும் நடத்தி வருகிறேன். இதில் கல்லூரி மாணவர்கள் மட்டு மில்லாமல், கார்ப் பரேட் நிறுவனங்கள் மற்றும் விளையாட்டுப் பள்ளி (பிளேஸ்கூல்) குழந்தைகள் என அனைத்து வயதினருக்கும் அவர்களுக்கு ஏற்ப பயிற்சிப் பட்டறைகளையும் செய் கிறேன். என்னுடைய பட்டறைக்கு வரும் பெரும்பாலானோருக்கு அந்தக் கலையினை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அவர்கள் காட்டும் அந்த ஆர்வம்தான் என்னை மென்மேலும் பல பயிற்சி முகாம்களை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியது.

இதன் மூலம் நாம் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்தாலும் என்னை நானே மெருகேற்றிக் கொள்வதற்காகவும் அமைந்தது. குறிப்பாக எனக்கான தன்னம் பிக்கையை வளர்த்துக் கொள்ள உதவியது. இவற்றை பார்க்கும் போது எனக்கு தோன்றுவது ஒரே எண்ணம்தான். நான் இந்தக் கலைகளை கற்றுக் கொண்ட போது, அதற்கான பயிற்சி முகாம்களை நடத்துவேன் என்று நினைக்கவில்லை. குறிப்பாக என்னுடைய சிறிய கூட்டில் இருந்து வெளியேறி என்னாலும் பல விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

இதுவரை இந்தக் கலையின் மூலம் 6000க்கும் மேற்பட்ட மக்களின் நம்பிக்கையை சம்பாதித்து இருக்கிறேன். என்னை பொறுத்தவரை பயிற்சி முகாம்களை நடத்துவது பணத்திற்காக மட்டுமல்ல… ஒரு கலையை ஒருவருக்கு சொல்லிக் கொடுக்கும் போது, அதுவே அவர்களின் தொழிலாக மாற வாய்ப் புள்ளது என்பதையும் உணர்ந்தேன்.

படித்துக்கொண்டே இந்த வேலையும் பார்ப்பது அவ்வளவு சுலபமாக இல்லை என்றாலும், என் குடும்பத்தினர் எனக்கு கொடுத்த ஆதரவினால் என்னால் அதை எந்த தடையுமில்லாமல் செய்ய முடிகிறது.

என்னுடைய 16 வயதில் துவங்கிய இந்தப் பயணம் தற்போது பலரின் வாழ்க்கையில் என்னால் அவர்களுக்கு தனிப்பட்ட அங்கீகாரத்தை ஏற்படுத்தி தர முடிந்துள்ளது என்று நினைக்கும் போது மனதுக்கு நிறைவாகவும் பெருமையாகவும் உள்ளது’’ என்று புன்னகைத்தார் க்ருத்தி சுதா.

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *