சென்னை, ஜூலை 8 சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் அய்பிஎஸ் நியமிக்கப்படுகிறார் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சந்தீப் ராய் ரத்தோர் தற்போது தமிழ்நாடு காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேநேரம், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதத்தை நியமித்து தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்மூலம் 110-ஆவது சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்கவுள்ளார்.