தூத்துக்குடி, ஆக. 22 – கடந்த 22 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை மாசு படுத்திய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், இது தொடர்பான மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்ச நீதி மன்றத்தில் தொடர்ந்துள்ள மேல் முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கு கடந்த மே மாதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசார ணைக்கு வந்தபோது, ஆலை நிர்வாகம் தரப்பில் ரூ.4 ஆயிரம் கோடி ஏற்கெனவே முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆலையை திறக்க காலதாமதம் செய்தால் இழப்பு அதிகமாகும் என்பதால் பிரதான வழக்கை விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து மனுக்களும் ஆக.22 மற்றும் ஆக.23 ஆகிய தேதிகளில் விசாரிக்கப்படும் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தமிழ்நாடு அரசும், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி தமிழ்நாடு மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் சார்பில் தாக்கல் செய்யப் பட்டுள்ள எழுத்துப்பூர்வமான வாதத்தில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கடைப்பிடிக்க வேண்டிய விதி முறைகளை முறையாக கடைப் பிடிக்காத தால் கடந்த 22 ஆண்டுகளாக சுற்றுச் சூழலுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு கடுமையான பாதிப்பை இந்த ஆலை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் முழுமையாக ஆய்வு செய்து ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த அறிக்கையை நீர்த்துப்போகச் செய்ய முடியாது.
தொடர்ந்து இந்த நிறுவனம் நீதி மன்றத்துக்கு தவறான தகவல்களை தந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த ஆலையை மீண்டும் திறக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே மூடப்பட்ட ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டுமென்ற வேதாந்தா நிறுவனத்தின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அதில் கோரி யுள்ளது.
நீதித்துறை மீது முழு நம்பிக்கை உள்ள தாக ஸ்டெர்லைட் நிறு வனம் தெரிவித் துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ள தாவது:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலை 22 ஆண்டுகளுக்கு மேலாக செயல் பட்டு வந்துள்ளது. இந்த 22 ஆண்டுகளும் ஆலையின் சுற்றுச்சூழல் செயல்பாடுகளை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரி யம் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளது.
வரையறை செய்யப்பட்ட விதி முறை களுக்கு உட்பட்டே ஆலை யின் இயக்கம் மற்றும் தொழில் நுட்ப செயல்பாடுகள் இருந்து வந்துள்ளதை அது உறுதி செய்துள்ளது.
அதன் அடிப்படையிலேயே ஸ்டெர் லைட் ஆலையின் இயக்க உரிமையை தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து புதுப்பித்து வந்துள்ளது. நீதித்துறை மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இறுதி விசாரணைக்காக காத்திருக்கிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.