மன்னார்குடி, ஜூலை 6- மன்னார்குடி கழக மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் எடக்கீழையூர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், ஜாதி ஒழிப்பு, சட்ட எரிப்புப்போராட்ட வீரர், பல போராட்டங்களில் பங்கு பெற்று சிறை சென்றவரும் ம.சித்தார்த்தன், ம.தேவேந்திரன் ஆகியோரது தந்தையுமான எடக்கீழையூர் ரெ.மணி (வயது 90) வயது மூப்பின் காரணமாக 1.7.2024 அன்று 12 மணியளவில் இயற்கை எய்தினார்.
அவரின் படத்திறப்பு நிகழ்வும், இறுதி நிகழ்வும் 2.7.2024 மதியம் மூன்று மணிக்கு எடக்கீழையூரில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்றது..
மாவட்ட கழகத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் படத்தினை திறந்து வைத்து இரங்கலுரை ஆற்றினார். அ.ம.மு.க.மாவட்டப் பொறுப்பாளர் தங்கதுரை, அஞ்சல் துறை ஓய்வு பெற்ற அதிகாரி வி.டி.பாண்டியன், த.மா.கா. தொழிற்சங்க மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.பாண்டியன்.அவர்களும், கழக மாவட்டச் செயலாளர் கோ.கணேசன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் சி.இரமேஷ், ஆசிரியரணி மாவட்டத் தலைவர் த.வீரமணி ஆகியோரும் இரங்கலுரை ஆற்றினர்.
மாவட்ட கழக அமைப்பாளர் ஆர்.எஸ்.அன்பழகன், கழக மாவட்ட துணைத் தலைவர் ந.இன்பக்கடல், மன்னை ஒன்றியத் தலைவர் மு.தமிழ்ச்செல்வன், நீடா. ஒன்றியத் தலைவர் தங்க.பிச்சைக்கண்ணு, மாவட்ட துணைச் செயலாளர் வீ.புட்பநாதன், மேனாள் மாவட்ட அமைப்பாளர் கைலை. ஊமத்துரை, நல்லிக்கோட்டை நல்லதம்பி, இளைஞரணி மாவட்டச் செயலாளர் க.இளங் கோவன், நீடாமங்கலம் ஒன்றிய துணைத் தலைவர் வீராச்சாமி, எடமேலையூர் நா.லெட்சுமணன், வடுவூர் ஆசையொளி, உலகநாதன் மற்றும் உறவினர்கள், அனைத்துக் கட்சிப் பொறுப்பாளர்கள் இறுதி நிகழ்வில் பங்கேற்றனர்.
.இறுதி நிகழ்வானது குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு டன் எந்தவித மூடச் சடங்குகளும் இன்றி பகுத்தறிவு முறைப்படி நடைபெற்றது.