கவனத்திற்குரிய
முக்கிய செய்திகள்
22.8.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* புதிய கல்விக் கொள்கை உருவாக்க குழு அமைத்திட கருநாடக அரசு முடிவு.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* காவிரி நீர் பகிர்வு குறித்து தமிழ்நாடு அரசின் மனுவை ஏற்று விசாரணை மேற்கொள்ள சிறப்பு அமர்வினை உச்ச நீதிமன்றம் அமைத்திடும்.
தி இந்து:
* பொது சிவில் சட்டத்தை எதிர்ப்போம் என ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் அறிவிப்பு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் போட்டியிடுகிறார்.
தி டெலிகிராப்:
* டில்லியின் முனிசிபல் கார்ப்பரேஷன் தற்காலிக ஊழியர்கள் அனைவரும் நிரந்தரப் பணியாளர்களாக முறைப்படுத்த டில்லி முதலமைச்சர் அரவிந்த் அறிவிப்பு.
* மத்தியப் பிரதேசத்தை வறுமையில் உள்ள மக்கள் இந்தியாவின் நான்காவது இடத்திற்கு கொண்டு வந்தது தான் மோடி ஆட்சியின் ஆத்ம நிர்பார் பாரத் சாதனை என கபில் சிபல் கண்டனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பல்கலைக்கழகங்கள் அறிவியல் மற்றும் பகுத்தறிவு சிந்தனைகளையே வளர்க்க வேண்டும், மதம் மற்றும் பழைமைவாத சிந்தனைகளை அல்ல – என கருநாடக முதலமைச்சர் சித்தராமையா பேச்சு..
– குடந்தை கருணா