ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறு வனத்தில் (ஆர்.அய்.டி.இ.எஸ்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம்: ஜூனியர் அசிஸ்டென்ட் பிரிவில் 16 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பொதுப் பிரிவினர் 50%, மற்றவர்கள் 45% மதிப் பெண்களுடன் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.8.2023 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு
தேர்வு மய்யம்: டில்லி, கோல்கட்டா, மும்பை, நாக்பூர், அய்தராபாத், பெங்களூரு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 300
கடைசி நாள்: 4.9.2023
விவரங்களுக்கு: rites.com