பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாரத் டைனமிக் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம்: மேனேஜ்மென்ட் டிரைய்னி 42 (எலக்ட்ரானிக்ஸ் 15, மெக்கானிக்கல் 12, எலக்ட்ரிக்கல் 4, கம்ப்யூட்டர் 1, சைபர் செக்யூரிட்டி 2, கெமிக்கல் 2, சிவில் 2, பிசினஸ் 1, ஆப்டிக்ஸ் 1, பைனான்ஸ் 2), நல அதிகாரி 2, மக்கள் தொடர்பு 1 என மொத்தம் 45 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: மேனேஜ்மென்ட் டிரைய்னி பணிக்கு தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்., நல அதிகாரி பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி, மக்கள் தொடர்பு பணிக்கு எம்.பி.ஏ., முடித்திருக்க வேண்டும்.
வயது: 27.7.2023 அடிப்படையில் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
தேர்வு மய்யம்: சென்னை, பெங்களூரு, போபால், புவனேஸ்வர், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம்
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 20.9.2023 மாலை 5:00 மணி
விவரங்களுக்கு: bdl-india.in