காரைக்கால் மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளரும், ஓய்வு பெற்ற தலைமையாசிரியருமான மானமிகு ரெ.ஜெயபாலன் (வயது 74) அவர்கள் நேற்று (3.7.2024) மாலை 4 மணி யளவில் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
தந்தை பெரியார் கொள்கைகளை ஏற்று, இறுதி வரை கடைப்பிடித்து, இயக்கத்தில் உறுதியோடு செயலாற்றி, தன் குடும்பத்தையும் அந்தப் பாதையில் வழிநடத்தியவர் பெரியார் பெருந்தொண்டர் ரெ.ஜெயபாலன் ஆவார்.
இவருக்கு, இவரின் இயக்கப் பணிகளுக்கு உறு துணையாக இருந்த ஜெ.சந்திரா என்ற மனைவியும், ஜெ.திராவிடமணி, ஜெ.இளஞ்செழியன், ஜெ.செந்தமிழன் ஆகிய மகன்களும் உள்ளனர். மருத்துவர் ஜெ.வைக்கம் மதி என்னும் மகளும் உண்டு.
அவருக்கு நமது வீரவணக்கம்!
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
4.7.2024
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
குறிப்பு: தலைமைக் கழகத்தின் சார்பில் புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி இறுதி நிகழ்வில் பங்கேற்பார். இறுதி ஊர்வலம் 4.7.2024 மாலை 4.00 மணியளவில் நிரவி திருவள்ளுவர் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்படும்.