முதல் தகவல் அறிக்கையில் சாமியார் பாபாவை சேர்க்காததால் பெரும் சர்ச்சை
லக்னோ, ஜூலை 4 உத்த ரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் சாமியார் சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலி யானோர் எண்ணிக்கை 121 ஆக அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறை பதிவு செய்துள்ள எப்அய்ஆரில் சாமியார் போலே பாபாவின் பெயர் இடம் பெறாததால், அவரை தப்ப வைக்க உ.பி அரசு முயற்சிப்ப தாக சர்ச்சை எழுந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் போலே பாபா எனும் சாமியாரின் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு 2.7.2024 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் பலியாகினர். இதில் 7 பேர் குழந்தைகள், ஒருவர் ஆண், மற்ற அனைவரும் பெண்கள். காயமடைந்தவர்கள் ஹத்ராஸ், எட்டா உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பலியானோர் எண்ணிக்கை 121 ஆக அதிக ரித்திருப்பதாக நிவாரண இயக்குநர் அலுவலக அதிகாரிகள் நேற்று (3.7.2024) உறுதி செய்துள்ளனர். இதில் 4 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட வில்லை. 28 பேர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர நிகழ்வு தொடர்ந்து உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேற்று நிகழ்வு இடத்தை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த விவகாரத்தில் நீதி விசாரணைக்கு அவர் உத்தர விட்டுள்ளார். மேலும், இந்த விவ காரத்தில் தவறு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாமல் இருப்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
இந்த நிகழ்வு தொடர்பாக பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 105 (கொலை அல்லாத மனிதக்கொலைகள்), 110 (மனிதக் கொலைகளுக்கு வழிவகுத்தல்), 126 (2) (தவறான கட்டுப்பாடு), 223 (அரசு அதிகாரிகள் உத்தரவை மீறுதல்), 238 (ஆதாரங்களை அழித்தல்) ஆகியவற்றின் கீழ் எப்.அய்.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. 80,000 பேர் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 2.5 லட்சம் பேர் கூடியதால் இந்த விபரீதம் நிகழ்ந்திருப்பதாக எப்.அய்ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பக்தர்களின் உண்மை யான எண்ணிக்கையை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மறைத்ததாகவும், போக்குவரத்து வசதிகளுக்கு ஒத்து ழைக்க வில்லை எனவும், விபரீதத்திற்குப் பிறகு நிகழ்வு இடத்திலிருந்த பக்தர்களின் செருப்பு உள்ளிட்ட உடைமைகளின் குவியல்களை பக்கத்து வயல்வெளிகளில் தூக்கிப் போட்டு ஆதாரங்களை மறைக்க முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறையினர், மாவட்ட நிர்வாகம் தரப்பில் எந்த தவறும் இல்லை எனவும் முழுக்க முழுக்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் தவறே விபரீதத்திற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே போலே பாபா என்று அழைக்கப்படும் பாபா நாராயண் ஹரி தலைமறைவாகி விட்டார். பிச்சுவானில் உள்ள அவரது ஆசிரமத்தை சுற்றி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளே செய்தியாளர்கள் உட்பட யாரும் அனும திக்கப்படவில்லை. ஆனாலும் ஆசிரமத்திற்குள் தான் பாபா இருந்ததாக சில காவல்து றையினர் கூறி உள்ளனர். தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர். அதே சமயம், காவல்துறையின் எப்.அய்.ஆரில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது மட்டுமே குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதில் பாபாவின் பெயர் இடம் பெற வில்லை. இதனால் போலே பாபாவை தப்ப வைக்க உபி காவல்துறையினர் முயற்சிப்பதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.