வழங்க தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு அமெரிக்கா அழைப்பு
சென்னை, ஜூலை 3- தமிழ்நாடு அரசின் மக்களை தேடி மருத்துவம் பற்றி கருத்துரை வழங்க தமிழ்நாடு மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியனுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
மருத்துவ முகாம்
சென்னை அடையாறு, கன்னி காபுரத்தில் நேற்று (1.7.2024), வயிற்றுப்போக்கு தடுப்பு முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங்பேடி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், அமைச்சர் மா.சுப்பிர மணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்கள் வரும் ஆகஸ்டு 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பிற்கு பெரும்பகுதியான காரணமாக கருதப்படுவது வயிற்றுப்போக்கு. எனவே, ரூ.1 கோடியே 25 லட் சம் மதிப்பில் 45.31 லட்சம் ஓ.ஆர்.எஸ். பொட்டலங்கள் வினியோகிக்கப்பட உள்ளது.
இதனால் 58.33 லட்சம் குழந் தைகள் பயன்பெறுவார்கள். சைதாப்பேட்டை அபித் காலனி யில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக அந்த பகுதி மக்கள் புகார் கூறியுள்ளனர். இதற்கு குடிநீர் வழங்கல் வாரியம் நடவ டிக்கை எடுத்து வருகிறது.
ரூ.3 ஆயிரம் கோடி
மேலும், உயிரிழந்த சிறுவனின் உடற்கூராய்வு அறிக்கைக்கு பின்னர் இறப்பிற்கான காரணம் தெரியவரும். இதேபோல, இறந்த சிறுவனின் தங்கை சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தபோது, குழந்தையின் தந்தையிடம் ரூ.1,000 லஞ்சம் கேட்டதாக கூறுவது தவறான கருத்து. வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் டெபாசிட் தொகையாக ரூ.1,000 கேட்டுள்ளனர். மேலும், மற்ற சோதனைகளுக்கு ரூ.1,000 என மொத்தம் ரூ.2 ஆயிரம் கேட்டனர்.
உலக வங்கியில் ஏற்கெனவே ரூ.2 ஆயிரத்து 700 கோடி கடன் பெற்று, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் முருத்துவமனைகள் கட்டுதல், மருத்துவ உபகரணங்கள் வாங்குதல் உள்ளிட்ட பல புதிய திட்டங்களுக்கு பயன்படுத்தப் பட்டுள்ளது. தற்போது எதிர் கால தேவைகளை கருத்தில் கொண்டு ரூ.3 ஆயிரம் கோடிக்கு பல்வேறு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்காக அமெரிக்காவில் உள்ள உலக வங்கியின் தலைவரிடம் நிதி கோர உள்ளோம். இதற்காக நாளை (அதாவது இன்று) அமெரிக்கா செல்ல உள்ளேன்.
‘நீட்’ விலக்கு
மக்களைத்தேடி மருத்துவத் திட்டம் குறித்து பேச அமெரிக்க பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது. ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் ‘மக்களை தேடி மருத்துவம்’ குறித்து மாண வர்களிடம் உரையாற்ற உள்ளேன்.
நீட் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கு முடிந்தால்தான் இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்து முடிவு எடுக்கப்படும்.
நடந்து முடிந்த நீட் தேர் வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டவர்களில் 50 சத வீதம் மாணவர்கள் மட்டுமே மீண்டும் தேர்வு எழுத வந்தனர். எஞ்சிய 50 சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. முகமூடி கிழிந்துவிடும் என்பதுதான் இதற்கு காரணம்.
தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவின் இலக்கே நீட் விலக்குதான். மருத்துவர்கள் நாளை முன்னிட்டு 105 மருத்துவர் களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.