கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 3.7.2024

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்: மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் கோரிக்கை.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* வர்ண ஜாதி முறையை இங்கே பேசாதீர்கள், மாநிலங் களவைத் தலைவர் தன்கர் மீது மல்லிகார்ஜூனா கார்கே ஆவேச தாக்கு.

* வகுப்புவாத அரசியலுக்கு மக்களவை தேர்தல் முற்றுப்புள்ளி வைத்தது: அகிலேஷ் பேச்சு.
* மக்களவையில் ஆற்றிய உரையின் நீக்கப்பட்ட பேச்சுக்களை மீண்டும் சேர்க்க வேண்டும்: மக்களவைத் தலைவருக்கு ராகுல் கடிதம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துங்கள்; ‘இது சமூக நீதியை உறுதி செய்யும்’, சந்திரசேகர் ஆசாத், எம்.பி. மக்களவையில் கோரிக்கை.

* எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேர்தல் குழு மீது தொடர்ந்து தாக்குதல்: ‘நம்பகத்தன்மை இல்லை’. உத்தரப் பிரதேசத்தில் “நான் அனைத்து 80 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் களை நம்ப மாட்டேன்” என அகிலேஷ் பேச்சு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் பற்றி குடியரசுத் தலைவர் உரையில் எதுவும் இல்லாதது வேதனை தருகிறது:

*”உங்கள் இதயத்தில் கைகளை வைத்துக் கொள்ளுங்கள், வீடற்றவர்கள், தாய்மார்கள் மற்றும் கைம்பெண்கள் பற்றி சிந்தியுங்கள். அவர்களைப் பற்றி சிந்தியுங்கள், பின்னர் தேசியவாதம் பற்றி பேசுங்கள்” என பிரதமரை நோக்கி

காங்கிரஸ் எம்.பி. காட்டம்.

*65% இடஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்த பாட்னா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பீகார் அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

* ‘தனியார் பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும்; கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களை நகர தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டாம். நீதிபதி முருகேசன் தலைமையிலான மாநில கல்வி கொள்கை குழு பரிந்துரை.

* தெலங்கானா மாநில அமைச்சரவை விரிவாக்கம்: பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை பிரதிநிதித்துவத் திற்கு முக்கியத்துவம் அளிக்க காங்கிரஸ் அரசு முடிவு.

– குடந்தை கருணா

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *