கிருட்டினகிரி, ஜூலை 3- கிருட்டின கிரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 30.6.2024 அன்று மாலை 4.30 மணியவில் பெரியார் அமைப்புச்சாரா தொழிலாளரணி மாவட்டத் தலைவர் மத்தூர் சி.வெங் கடாசலம் இல்ல மாடியில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது.
கூட்டத்திற்கு கிருட்டினகிரி மாவட்டக் கழகத் தலைவர் கோ.திராவிடமணி தலைமை வகித்துப் பேசினார்.
மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தின் துவக்கத்தில் ஊற்றங்கரை ஒன்றியச் செயலாளர் செ.சிவராஜ் கடவுள் மறுப்பு கூறினார். கூட்டத்திற்கு மாவட்ட மகளிரணி தலைவர் மு. இந்திராகாந்தி, மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், மாவட்ட துணைத் தலைவர் வ. ஆறுமுகம், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ச. கிருட்டினன் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர்.
தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.செயராமன், நீட் தேர்வின் பாதிப்புகளை எடுத்துக் கூறி தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர் களின் அறிவிப்புக்கிணங்க தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திராவிடர் கழக இளைஞரணி – மாணவர் கழகம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய அளவில் 5 – குழுக்கள் இருசக்கர வாகன பரப்புரை மேற்கொண்டுவரும் பிரச்சாரம் வருகின்ற 11ஆம் தேதி தொடங்கி 15-7-2024 அன்று மாலை சேலத்தில் நிறைவு பெறுவதை விளக்கியும், மாவட்ட கழக பொறுப்பாளர்களும், தோழர்களும் பெரும் திரளாக பங்கேற்று இருசக்கர வாகன குழுவினரை வரவேற்கும் நோக்கங்கள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார்.
மாநில பகுத்தறிவாளர் கழக துணைப்பொதுச் செயலாளர் அண்ணா.சரவணன், விவசாய அணி மாவட்டத் தலைவர் இல. ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.சிலம்பரசன், மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் பு.இராசேந்திரபாபு, செ.இராமசெயம், மாவட்ட மாணவர் கழக ச.அகரன், கிருட்டினகிரி நகரச் செயலாளர் ஆட்டோ.அ.கோ. இராசா, ஒன்றியத் தலைவர்கள் காவேரிப்பட்டணம் பெ.செல்வம், மத்தூர் கி.முருகேசன்,ஊற்றங்கரை அண்ணா அப்பாசாமி, மத்தூர் ஒன்றியச் செயலாளர் வி.திருமாறன், மாவட்ட தொழிலாளரணி நிர்வாகிகள் செ.ப.மூர்த்தி, எம்.சின்ராஜ், பகுத்தறிவாளர் கழக நிர்வாகிகள் இர.பழனி, அ.வெங்கடாசலம், மு.வேடியப்பன், மா.சிவசங்கர், க. வெங்கடேசன், இராம.சகாதேவன், மு.செயரட்சகன், செ.ஜானகிராமன், மகளிரணி நிர்வாகிகள் முருகம்மாள், வெ.செல்வி, பர்கூர் டி. தனசீலன், மூங்கிலேரி செ.மாதேசு, வெ.ச.தரணி, ச.சதிஸ், ப்ரணவ் சஞ்சய், இராஜபாண்டி உள்ளிட்ட கழகத் தோழர்களும், பொறுப்பாளர்களும் கலந்துக் கொண்டு கருத்துரையாற்றினர்.
இறுதியாக பெரியார் அமைப்புச்சாரா தொழிலாளரணி மாவட்டத் தலைவர் சி.வெங்கடாசலம் நன்றி கூறினார்.
கிருட்டினகிரி மாவட்டம் ஊற்றங் கரை ஒன்றியம் பனமரத்துப்பட்டி முது பெரும் பெரியார் பெருந்தொண்டர் கீ.அ.கோபாலன் மறைவிற்கும், 69% இடஒதுக்கீடு நீதிபதி கொடும்பாவி எரிப்பு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற காவேரிப்பட்டணம் மேனாள் ஒன்றியத் தலைவர் புலியாண்டூர் மு.இராமசாமி மறைவிற்கும் இம்மாவட்ட கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்து இரண்டு மணி துளிகள் அமைதிக்காக்கப்பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவுரை ஏற்று நீட் தேர்வை இரத்து செய்யக்கோரி தமிழ்நாடு தழுவிய அளவில் திராவிடர் கழக இளைஞரணி – மாணவர் கழகத்தினரின் இருச்சக்கர வாகன பரப்புரை பிரச்சாரம் அய்ந்து முக்கிய நகரங்களில் வருகின்ற 11.7.2024 தொடங்கி அனைத்து மாவட்டத்திலும் பிரச்சாரம் மேற்கொண்டு அப்பிரச்சாரம் 15.7.2024 அன்று சேலத்தில் நிறைவு பெறுகிறது.
வருகின்ற 13,14-தேதிகளில் கிருட்டின கிரி மாவட்டத்திற்கு வருகைத் தரும் இருச்சக்கர வாகன பிரச்சாரப் படை குழுவினருக்கு மாவட்ட கழகம் சார்பில் சிறப்பான வகையில் வர வேற்று பிரச்சாரம் மேற்கொண்டு வழியனுப்புவது எனவும், சேலத்தில் வருகின்ற 15/07/2024 அன்று கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாளில் சேலம் கோட்டையில் நீட் தேர்வை இரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்று வரும் இருசக்கர வாகன பரப்புரை நிறைவில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கிருட்டினகிரி மாவட்டத்திலிருந்து கழகத்தோழர்கள் பெரும் திரளாக சென்று கலந்துக்கொள்வது எனவும், உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான “விடுதலை” 90-ஆம் ஆண்டு பிறந்த தொடக்க நாளன்று “விடுதலை” சந்தாக்களை திரட்டி வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதுடன், தொடர்ந்து நமது இயக்க ஏடுகளான விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, தி.மாடர்ன் ரேசனலிஸ்ட், திராவிடப் பொழில் உள்ளிட்ட இதழ்களுக்கு சந்தாக்களை திரட்டி வழங்குவது எனவும்,
நீட் தேர்வுவை ரத்து செய்யக்கோரி கிருட்டினகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் இருசக்கர வாகன பிரச்சார குழுவினருக்கு வரவேற்பு குழு கீழ் கண்டவாறு: கிருட்டினகிரியில் மாவட் டத் தலைவர் கோ.திராவிடமணி தலை மையிலும், மத்தூரில் ஒன்றியத்தலைவர் கி.முருகேசன் தலைமையிலும், சாம்பல்பட்டியில் மாவட்டத் துணைத் தலைவர் வ. ஆறுமுகம் தலைமையிலும், ஊற்றங்கரையில் ஒன்றியத்தலைவர் அண்ணா அப்பாசாமி தலைமையிலும், அனுமத்த தீர்த்தத்தில் ஒன்றிய செயலாளர் செ. சிவராஜ் தலைமையிலும் வரவேற்பு அளிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
பகுத்தறிவாளர் கழக
புதிய நிர்வாகிகள் நியமனம்
மாவட்டத் தலைவர் ச.கிருட்டினன், மாவட்டச் செயலாளர் க.வெங்கடேசன், மாவட்ட துணைத் தலைவர் அ.வெங் கடாசலம், மாவட்டச் துணைச் செயலாளர் மா.சிவசங்கர், ஊற்றங்கரை ஒன்றிய ப.க. நிர்வாகிகள்: தலைவர் இராம.சகாதேவன், செயலாளர் செ.மாதேசு, மத்தூர் ஒன்றிய ப.க.நிர்வாகிகள்: தலைவர் – இரா.பழனி, துணைத்தலைவர் பொன்.சிவகுமார், செயலாளர் மு.செயரட்சகன், பர்கூர் ஒன்றிய ப.க.தலைவர் தனசீலன் ஆகியோர்களை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோ.திராவிடமணி பரிந்துரையுடன் மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச் செயலாளர் அண்ணா. சரவணன் ஒப்புதலோடு தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. செயராமன் பகுத்தறிவாளர் கழக புதிய நிர்வாகிகளை அறிவித்தார்.
கூட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்று வரும் இருசக்கர வாகன பிரச்சார பயணக்குழுவினர் வரவேற்பு செலவினத்திற்காக தோழர்கள் நன்கொடை அறிவித்து வழங்கியவர்கள் திராவிடர் கழக மாவட்ட துணைச்செயலாளர் சி.சீனிவாசன் ரூ2000/-, மாவட்ட மகளிரணி தலைவர் மு. இந்திராகாந்தி ரூ1000/-, மாவட்ட கலைத்துறை தலைவர் இரா.பழனி ரூ1000/-, மூங்கிலேரி செ.மாதேசு ரூ1000/-, மாவட்ட தொழிலாளரணி நிர்வாகிகள் செ.ப.மூர்த்தி ரூ500/-, சின்ராஜ் முருகம்மாள் ரூ500/-, மத்தூர் ஒன்றிய ப.க.நிர்வாகி மு.செயரட்சகன் ரூ500/-, பர்கூர் ஒன்றிய ப.க.நிர்வாகி தனசீலன் ரூ 500/- உள்பட மேற்கண்ட தோழர்கள் தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. செயராமன் முன்னிலையில் மாவட்டத் தலைவர் கோ. திராவிடமணியிடம் நன்கொடையை வழங்கினர்.
பகுத்தறிவாளர் கழக நிர்வாகி செ.ஜானகிராமன் ரூ1000/- நன்கொடையும், விடுதலை ஆண்டு சந்தா ஒன்றும் வழங்குவதாக அறிவித்துள்ளார். மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக அமைய உறுதுணையாக இருந்த மாவட்ட தொழிலாளரணி தலைவர் அ.வெங்கடாசலம் – செல்வி வாழ்விணையர்களுக்கும், ஊற்றங்கரை ஒன்றியத்தில் 20 – க்கும் மேற்பட்ட விடுதலை சந்தாக்களை திரட்டுவதற்கு உறுதுணையாக இருந்த மூங்கிலேரி செ.மாதேசு ஆகியோருக்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. செயராமன் பயனாடை அணிவித்து சிறப்பித்து பாராட்டுகளை தெரிவித்தார்.