ஈரோடு பெரிய அக்ரகாரம் டி.முகமது இஸ்மாயில் அவர்களின் வாழ்விணையர் ஹாஜிரா பீபீ (வயது 85) 30.6.2024 அன்று உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.
அம்மையாரின் உடல் 1.7.2024 அன்று ஈரோட்டில் அடக்கம் செய்யப்பட்டது. தலைமை கழக அமைப்பாளர் த.சண்முகம் மூலமாக செய்தி அறிந்த கழகத் தலைவர் ஆசிரியர் மறைந்த அம்மையாரின் மகன் DMI சாதிக் அலியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தம்முடனும் மிகுந்த பற்றுக் கொண்ட குடும்பம் என்றும், பெரிய அக்ரகாரம் பகுதியில் பலர் இயக்கத்தின் மீது பற்றுக் கொண்டவர்களாக இருந்ததையும், சாதிக் அலியிடம் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்.
தாம் ஈரோட்டிற்கு வரும்போது இல்லத்திற்கு வருவதாகவும் அவரிடம் தெரியப்படுத்திக் கொண்டார்.