கோத்ரா, ஜூலை 2– நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக குஜராத்தில் கைதான பள்ளி நிர்வாகி உள்ளிட்ட 5 பேரை காவலில் எடுத்து சி.பி.அய். அதிகாரிகள் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீட் மோசடியில் மாநிலங்களுக்கு இடையே செயல்படும் பெரும் கும்பல் உள்ளதாக நீதிமன்றத்தில் சி.பி.அய். தெரிவித்துள்ளது.
நீட் கேள்வித்தாள் கசிவு மோசடியில் பீகார், ஜார்கண்ட் மாநிலத்தில் கைதானவர்களிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் குஜராத் மாநிலத்தில் ஏழு இடங்களில் சி.பி.அய். சோதனை நடத்தியுள்ளது.
கோத்ராவில் உள்ள தேர்வு மய்யத்தின் பள்ளி நிர்வாகி உட்பட 5 பேரை சி.பி.அய். காவலில் எடுத்துள்ளது. இவர்களுக்கு வெளி மாநில நீட் மோசடி கும்பல்களு டன் முக்கிய தொடர்பு உள்ளதாக, கோத்ரா முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சி.பி.அய். தெரிவித்துள்ளது.
வெளி மாநில கும்பல் களுடன் இணைந்து கோத்ராவில் உள்ள இரண்டு பள்ளிகளை தேர்வு மய்யமாக மாண வர்களை தேர்வு செய்ய வைத்துள்ளதாகவும், இதற்காக உள்ளூர் முக வரிகளும் போலியாக கொடுக்கப்பட்டுள்ளன.
பீகார், ஒடிசா, மகா ராட்டிரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 27 மாணவர்கள் கோத்ராவை தேர்வு மய்யமாக தேர்வு செய்துள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மாணவர்களிடமி ருந்து தலா 10 லட்ச ரூபாய் வரை மோசடி கும்பல் பெற்றுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்துக்கு அனுப்பப்பட்ட கேள்வித் தாள் பீகார் மாநிலத்தில் கசிந்தது போன்று குஜராத் மோசடிக் கும்பலுக்கும் கிடைத்ததா என்ற கோணத்தில் தீவிர விசா ரணை நடைபெற்று வரு கிறது.