சிதம்பரம், ஜூலை 2- சிதம்பரம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் புவனகிரியில்30.6.2024 அன்று நடைபெற்றது.
இதில், மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன் வரவேற்புரையாற்றினார். தலை மைக் கழக அமைப்பாளர் த.சீ.இளந்திரையன் தலைமை வகித்து கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார். சிதம்பரம் கழக மாவட்ட செயலாளர் அன்பு. சித்தார்த்தன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் கோவி.நெடுமாறன், மாவட்ட அமைப்பாளர் கு.தென்ன வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில், தமிழ்நாடு தழுவிய இருசக்கர ஊர்தி பரப்புரை பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இதில், புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு கடலூர் வழியாக சிதம்பரம் வருகை தரும் நீட் எதிர்ப்பு குழுவினருக்கு சிதம்பரம் கழக மாவட்ட எல்லையான புதுச்சத்திரத்தில் வரவேற்பளித்து, பரங்கிப்பேட்டை, புவனகிரி, காட்டுமன்னார்குடி, சேத்தியாத்தோப்பு ஆகிய ஊர்களில் வரவேற்பு கூட்டங்களையும், சிதம்பரம் அண்ணாமலை நக ரில் அனைத்து கட்சி களை அழைத்து வரவேற்பு பொதுக்கூட்டம் நடத்து வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் பரங்கிப்பேட்டை ஒன்றிய தலைவர் மஞ்சகுழி ஜெயபால், புவனகிரி இராமலிங்கம், பெரியார் பெருந்தொண்டர் பெருமத்தூர் பழனியாண்டி, காட்டுமன்னார்குடி ஒன்றிய செயலாளர் ஆண்டிபாளையம் முருகன், மாவட்ட இளைஞரணி தலைவர் பஞ்சநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிறைவாக மாவட்ட இணைச் செயலரும், தலைமைக் கழக சொற்பொழிவாளருமான புவனை யாழ்.திலீபன் நன்றி கூறினார்.