புதுடில்லி, ஜூலை 2 நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் தொடர்ந்து உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.
சமாஜ்வாடி கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அகிலேஷ் யாதவின் உரையிலிருந்து: ‘‘ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசும் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி அரசும் தரமான சாலைகளைப் போட்டன. அதில் இவர்கள் இந்திய விமானப்படை விமானத்தை இறக்கி வித்தை காட்டுகின்றனர். ஆனால் இவர்கள்(மோடி தலைமையிலான பாஜக அரசு) போட்ட சாலைகளில் மழை பெய்தால் படகுகூட செல்ல முடியாத நிலை! எங்கே பெரும் பள்ளம் உள்ளது? எங்கே சாலை உள்ளது? என்றே தெரியவில்லை.
டில்லியில் பெய்த மழை யின் போது இவர்கள் போட்ட சாலையில் பெரு வெள்ளம் ஓடியது, அப்போது சாலைகளில் ஏற்பட்ட உடைப்பால் பெரும் பள்ளங்கள் காரணமாக அதில் சிக்கி 1`1 பேர் இறந்து போனார்கள்.
இதுதான் இவர்கள் கொண்டுவந்த வளர்ச்சியின் அவலநிலை.
நாங்கள் போட்ட சாலைகளில் விமானத்தை இறக்கி வித்தை காட்டுகிறார்கள் இவர்கள் போட்ட சாலையில் உயிர்கள் பலியாகின்றன: அகிலேஷ் யாதவ்

Leave a Comment