புதுடில்லி, ஜூலை 2- நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று 3ஆவது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற மோடி நேற்று (1.7.2024) 111ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார்.
அப்போது பேசிய அவர், இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் நாளன்று தாயின் பெயரில் ஒரு மரம் என்ற சிறப்பு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. நான் எனது தாயின் பெயரில் ஒரு மரத்தை நட் டுள்ளேன் என்றார்.
இந்நிலையில், மக்க ளின் அத்தியாவசிய பிரச் சினைகள் பற்றி மனதில் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசாதது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா கூறியதாவது:
ஒன்றிய அரசு ஊன்றுகோலில் நடந்து கொண்டிருக்கிறது. இம்முறை புத்திசாலித்த னமாக ஏதாவது சொல் வார் என நினைத்தோம்.
நீட் தேர்வு பற்றியோ, ரயில்வே விபத்து பற்றியோ, அன்றாடம் உள் கட்டமைப்பு சரிவுகள் பற்றியோ அவர் எதுவும் பேசவில்லை. டில்லி விமான நிலையத்தில் ஒருவர் உயிரிழந்த நிகழ்வு குறித்து அவர் பேசவில்லை.
மக்கள் நலன் சார்ந்த எந்தப் பிரச்சினையையும் பிரதமர் பேசவில்லை. நிகழ்ச்சி நிரலை மாற்றுவதே அவரது முறை.
எல்லோரும் நீட் மோசடிகள் பற்றி பேசுவதால், கவனத்தைத் திசைதிருப்ப நீங்கள் கேரளாவிலிருந்து குடை பற்றி பேசுகிறீர்கள்.
தேர்தலின் போது தெற்கிற்கு எதிராக வடக்கே போட்டியிட்டீர்கள். மக்கள் மறந்து விடுவார்கள் என நினைக்கிறீர்களா? பிரச்சாரத்தின் போது நீங்கள் சொல்வது உண்மை, இப்போது நீங்கள் செய்வது பிரசாரம் என பவன் கெரா தெரி வித்தார்.