கண்ணை அகலமாகத் திற… எதிரியைப் போட்டுத் தாக்கு!

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

“அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்’ உலகப் போட்டியில் முதல் இந்திய பெண்ணாக வெற்றி பெற்றிருப்பவர் பூஜா தோமர். இவர் பெண்கள் “ஸ்ட்ராவெயிட்’ பிரிவில் பிரேசிலின் ராயனே டாஸ் சாண்டோஸை 30-27, 27-30, 29-28 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள முஸாபர் நகர் மாவட்டத்தில் புதானா கிராமத்தைச் சேர்ந்த பூஜா தோமர், தற்காப்புக் கலைகளில் ஒரு பிரிவான “வுஷூ’வில் அய்ந்து தேசிய பட்டங்களை வென்றுள்ளார். 2023-இல் உலகின் மிகப் பெரிய கலப்பு தற்காப்புக் கலை போட்டிகளை நடத்தும் அமெரிக்க நிறுவனமான யூ.எஃப்.சி.யுடன் ஒப்பந்தம் போட்டவரும் இவர்தான். அவரிடம் பேசியபோது:

“”நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தேன். எனக்கு இரண்டு மூத்த சகோதரிகள். நான் கடைக் குட்டி. பிறந்தது மூன்றும் பெண்கள் என்றாலும், பெற்றோர் கவலைப்படவில்லை.

“தைரியசாலிகளாக இருந்தால் தான் சவால்களை எதிர்கொள்ள முடியும்’ என்பார் என் அப்பா. எனக்கு ஆறு வயதாகும்போது அப்பா காலமானார். எதிர்காலம் இருண்டுவிட்டது என்று பயந்தோம். அம்மாதான் தைரியமாக, குடும்பப் பாரத்தைச் சுமந்தார். இரண்டு வேளை உணவு, புது உடைகள் என்பது கனவாகிப் போயின.

மூத்த சகோதரி மருத்துவரானார். இரண்டாமவர் செவிலியர் ஆனார். எனக்கு படிப்பு ஏறவில்லை. கிராமத்தில் சிறுவர்களை அடித்து துவைப்பேன். (விளையாட்டாகத் தான்) ஜாக்கிசான் படங்களைப் பார்த்து சண்டைகள் போடுவதில் பல யுக்திகளைக் கற்றேன்.

பெயருக்காகப், பள்ளிக்குச் சென் றாலும் கராத்தே போட்டிகளில் வென்றேன். 17-ஆம் வயதில் “வுஷூ’ பிரிவில் பயிற்சி பெற்று அய்ந்து தேசிய விருதுகளைப் பெற்றேன். அக்கா மருத்துவர் படிப்பை முடிக்கும் தருவாயில் பணத் தேவை ஏற்பட்டிருந்தது.

அந்த சமயத்தில் எனக்கு அய்ம்பதாயிரம் கொடுத்து “கலப்பு தற்காப்புக் கலை’ போட்டிகளில் சேர்த்துக் கொண்டார்கள். அது எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. ஹிந்தி நடிகர் “டைகர்’ ஷெராஃப் நிர்வகிக்கும் தற்காப்புக் கலை பயிற்சி நிலையத்தின் சார்பாக இந்தோனேஷியாவில் என்னை பயிற்சிக்கு அனுப்பினார்கள். 28-ஆம் வயதில் எதிராளியை வீழ்த்தும் லாவகத்தை பயிற்சி மூலம் பெற்றேன்.

2023-இல் இருந்து பன்னாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளத் தொடங்கினேன். ஜூன் 9-இல் நடந்த போட்டியில் எதிராளி திறமையானவர். இரண்டாவது சுற்று மிகவும் கடினமாக அமைந்தது. என்னால் தாக்கு பிடிக்க முடிய வில்லை. தளர்ந்து நின்றேன். “கண்ணை அகலமாகத் திற எதிரியைப் போட்டுத் தாக்கு’ என்று பயிற்சியாளர் உற்சாகப்படுத்த, மூன்றாம் சுற்றில் எதிராளி ராயனே டாஸ் சாண்டோஸை வீழ்த்தி னேன். சில நொடிகளில் நானும் மயக்கமானேன்.
இந்திய வீரர்கள் தோல்வியடை பவர்கள் அல்ல. விரைவில் வாகையராவோம். இந்த வெற்றி எனது வெற்றி அனைத்து இந்திய ரசிகர்களுக்கும், அனைத்து இந்திய தற்காப்புக் கலை வீரர்கள் வீராங் கனைகளுக்கும் கிடைத்த வெற்றி. இந்த வெற்றிக்குப் பிறகு, எனது செல்லப் பெயர் “சூறாவளி’ என்றாகிவிட்டது.” என்கிறார் பூஜா தோமர்.

முதல் அதிபர்

மெக்சிகோ நாட்டின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன் பாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மெக்சிகோ நகர மேயராக அய்ந்து முறை பதவி வகித்த இவர், நாடாளுமன்றத் தேர்தலுக்காக 2023இல் மேயர் பதவியில் இருந்து விலகினார்.

கிளாடியா அரசியலுக்கு வருவதற்கு முன்பு சுற்றுச்சூழல் பொறியாளராகவும் அய்.நா.வின் பருவநிலை விஞ்ஞானிகள் குழுவிலும் பணியாற்றியுள்ளார். இடதுசாரி சிந்தனை கொண்ட இவர் சமூக நீதிக்கான தேடல் கொண்டவர். சட்ட விரோதக் குடியேற்றம், போதைப் பொருள்களும் துப்பாக்கிகளும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியா வது, ஊதிய வரையறை – ஓய்வூதி யம் உள்ளிட்ட முன்னாள் அதிபரின் பொருளாதாரக் கொள்கை, பெண்களுக்கு எதிரான வன்முறை போன்றவை கிளாடியா முன் இருக்கும் பெரிய சவால்கள். மெக்சிகோ நகர மேயராக அவர் இருந்தபோது சிறப்பாகச் செயல் பட்டதைப் போலவே இந்தச் சிக்கல்களையும் சமாளிப்பார் என்று கிளாடியாவின் ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *