சென்னை, ஜூலை 2- தமிழ்நாட் டில் 18 முக்கிய அய்.ஏ.எஸ் அதி காரிகளை இடமாற்றம் செய்து தலை மைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சுற்றுலாத் துறையின் கூடுதல் தலைமை செயலாளராக இருந்த மணிவாசன் அய்ஏஎஸ், நீர்வளத் துறையின் கூடுதல் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொதுப்பணி துறையின் முதன்மைச் செயலாளராக இருந்த சந்திரமோகன் அய்ஏஎஸ், சுற் றுலா துறையின் முதன்மைச் செயலாளரா கவும் கால்நடை பராமரிப்பு துறை யின் கூடுதல் செயலாளராக இருந்த மங்கத் ராம் சர்மா அய்ஏஎஸ், பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளராக நியமனம் செய்யப் பட்டுள்ளனர். ஊரக வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளராக இருந்த செந்தில் குமார் அய்ஏஎஸ், சுற்றுச்சூழல் துறையின் செயலாள ராகவும் சுற்றுச்சூழல் துறையில் செயலாளராக இருந்த சுப்ரியா சாகு அய்ஏஎஸ், மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத் துறை செய லாளராக இடம் மாற்றம் செய்யப்பட் டுள்ளனர்.
மக்கள் நல்வாழ்வு துறை செயலாளராக இருந்த ககன் தீப் சிங் பேடி அய்ஏஎஸ், ஊரக வளர்ச்சித் துறையின் செயலாளரா கவும் நெடுஞ்சாலை துறையின் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் அய்ஏஎஸ், உயர்கல்வித்துறை செயலாளராக இடமாற்றம் செய் யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சாலை பாதுகாப்பு திட்ட இயக்கு னராக இருந்த செல்வராஜ் அய்ஏஎஸ், நெடுஞ்சாலை துறை செயலா ளராகவும் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த ஜான் லூயிஸ் அய்ஏஎஸ், சமுக பாதுகாப்பு திட்ட இயக்குநராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் செயலாளராக இருந்த விஜயலட்சுமி அய்ஏஎஸ், இந்திய மருத்துவம் ஹோமியோபதி துறையின் இயக்குநராகவும் நில சீர்திருத்தத் துறையின் ஆணையராக இருந்த வெங்கடாசலம் அய்ஏஎஸ், வரலாற்று ஆராய்ச்சி மற்றும் ஆவண காப்பகம் துறையின் ஆணையராகவும் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.
AIDS கட்டுப்பாட்டு நிறுவனத்தின் திட்ட இயக்குநராக இருந்த ஹரிஹ ரன் அய்ஏஎஸ், நில சீர்திருத்த துறையின் ஆணையராகவும் நகராட்சி நிர்வாக துறையின் செய லாளராக இருந்த லில்லி அய்ஏஎஸ், போக்குவரத்து துறையின் சிறப்பு செயலாளராகவும் நியமனம் செய்யப் பட்டுள்ளனர். நீர்வளத் துறையின் செயலாளராக இருந்த சந்திப் சக்சேனா அய்ஏஎஸ் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தின் செயலாளராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் செயலாளராக இருந்த சாய் குமார் அய்ஏஎஸ், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனத்தின் இயக்குநராகவும் அயல்நாட்டு வேலை வாய்ப் பாகத்தின் தலைவராக இருந்த மகேஸ்வரன் அய்ஏஎஸ், தமிழ்நாடு உப்புக் கழகத்தின் இயக்குநராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை செயலாளர் ஆக இருந்த வைத்திநாதன் அய்ஏஎஸ்-ற்கு, அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் இயக்குநராக கூடுதல் பொறுப்பு ஏற்றுள்ளார். தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீன படுத்துதல் துறையின் திட்ட இயக்குநராக இருந்த ஜவகர் அய்ஏஎஸ், சமூக சீர்திருத்த துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.