சென்னை, ஜூலை 1- சென் னைக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள பகுதிகளில் குடிநீர் விநி யோகத்தின் அளவு மற்றும் தரத் தினை மேம்படுத்துவதற்காக, கணக்கெடுப்பு பணிகள் இன்று (1.7.2024) முதல் தொடக்கப்பட உள்ளதாக குடிநீர் வாரியம் தரப்பில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:
பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் விநியோக அளவு மற்றும் தரத்தினை மேம்படுத்திட தமிழ்நாடு அரசு நிதித்துறை மூலமாக சென்னை நகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ், சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் 15 மண்டலங்களில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 1.7.2024 முதல் 60 நாட்களுக்கு அடிப் படை கணக்கெடுப்பு பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளது.
இந்த கணக்கெடுப்பின் அடிப் படையில், சென்னை குடிநீர் வாரியத்தின் செயல்பாட்டு திறனை மேம்படுத்துதல், சேவை எல்லையை விரிவாக்குதல், வீட்டு இணைப்புகளை அதிகப்படுத்துதல், நாள்தோறும் குடிநீர் வழங்கல் சேவையை மேம்படுத்துதல், நிர்ணியக்கப் பட்ட தரத்தின் அளவுகளின் அடிப் படையில் குடிநீர் விநியோகம் விநியோகிக்கப்படுகிறதா போன்ற வைகள் தொடர்பாக சென்னை பகுதிகளுக்குட்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகள்தோறும் கணக்கெடுப்பு பணிகள் மேற் கொள்ளப்படும்.
எனவே, சென்னை குடிநீர் வாரியத்தால் உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு, அடையாள அட்டை யுடன் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ளும் களப்பணியாளர்கள், பொதுமக்களிடம் குடிநீரின் தரம் மற்றும் குடிநீர் வழங்கப்படும் அளவு மற்றும் அதன் கால அளவு உள்ளிட்ட பல்வேறு விவரங் களை சேகரிக்கும் பணிகளை மேற்கொள்வார்கள். இதற்கு தேவையான விவரங்களை பொது மக்கள் களப்பணியாளர்களிடம் தெரிவித்து குடிநீர் வாரியத்தின் செயல்பாட்டினை மேம்ப டுத்த ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரி விக்கப்பட்டுள்ளது.
600 இடங்களில் மாதிரி சேகரிப்பு
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கீழ்ப்பாக்கம், புழல், சூரப் பட்டு, வீராணம், செம்பரம்பாக்கம் ஆகிய 5 நீரேற்று நிலையங்கள், நெம்மேலி, மீஞ்சூர் ஆகிய கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு நாள்தோறும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
நாள்தோறும் 300 முதல் 600 இடங் களில் குடிநீர் மாதிரிகள் எடுத்து குடிநீரின் தரம் ஆய்வு செய்தும் வருகிறது. ஏராளமான இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுத்து, குடிநீரின் தரம் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரம் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நவீன பரிசோதனைக் கூடம்
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கீழ்ப்பாக்கத்தில் அமைக்கப் பட்டுள்ள குடிநீர் மற்றும் கழிவு நீர் தரத்தை அறியும் நவீன பரி சோதனைக் கூடத்தில், தரமான குடிநீர் வழங்குதல், பாதுகாப்பான முறையில் கழிவுநீர் அகற்றும் பணி, குடிநீர் தரத்தை பரிசோதிப்பது ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் கிணற்று நீர், ஆழ் துளை நீர் போன்ற நீர்களின் தரத்தை ஆய்வு செய்யும் தர உறுதி பிரிவும் இயங்கி வருகிறது.
மேலும், சென்னை மாநகராட்சி யில் உள்ள குடிநீர் தரத்தை உறுதி செய்யும் வகையில் தின மும் 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுத்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பரிசோதனைக் கூடத்தில் குடிநீர் தரம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரின் தரத்தை பரிசோதிக்க தனித் தனி பரிசோதனைகள் மேற்கொள்ளப் படுகின்றன.
இதன்மூலம் குடிநீர் மற்றும் கழிவுநீரில் உள்ள வேதிப்பொருட்கள் மற்றும் நுண்ணுயிரிகள் ஆகியவற்றை பரிசோதிக்க முறையே 23 மற்றும் 16 பரிசோதனைகள் மேற்கொள்ளப் படுகின்றன.