புதுடில்லி, ஜூலை 1- காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒருபதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பீகாரில் கொண்டு வரப்பட்ட 65 சதவீத இடஒதுக்கீட்டு சட்டத்தை 9 ஆவது அட்டவ ணையில் சேர்க்க வேண்டும் என்று அய்க்கிய ஜனதாதளம் தீர்மானம் நிறைவேற்றி உள் ளது. ஆனால், அதன் கூட்ட ணிக்கட்சியான பா.ஜனதா மவுனம் சாதிக்கிறது. இருப்பினும், 9 ஆவது அட்டவணையில் சேர்ப்பதும் தீர்வு அல்ல.
ஏனென்றால், கடந்த 2007ஆம் ஆண்டு ஒரு வழக்கில், 9 ஆவது / அட்டவணையில் சேர்க்கப்பட்ட சட்டங்களும் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டவை என்று உச்சநீதிமன்றம் கூறியது. எனவே, இடஒதுக்கீட்டை 50 சதவீதத்துக்கு மேல் உயர்த்த நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றுவதுதான் ஒரே வழி. பிரதமர் மோடி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். அடுத்த கூட்டத் தொடரில் இதற்கான மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.