புதுடில்லி, ஜூலை 1- காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி முதல்முறையாக மக்களவை எதிர்க்கட்சி தலைவராக தேர்வாகி இருக்கிறார். இந்த பதவியை பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பேன் என அவர் உறுதியளித்து இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளி யிட்டுள்ள காட்சிப் பதிவில்,
‘எதிர்க்கட்சித் தலைவர் என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் வலிமையான ஜனநாயகக் கருவி ஆகும். உங்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் முழுவலிமையுடன் எழுப்புவேன் என உறுதியளிக்கிறேன்’ என குறிப்பிட்டி ருந்தார். மேலும் அந்த காட்சிப்பதிவில் மாணவர்களுடன் அவர் உரையாடும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. நீட் மறு தேர்வே இளைஞர்களின் கோரிக்கை என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் நீட் தேர்வு தொடர்பாக நாடாளுமன்றத்தில் கடந்த 28ஆம் தேதி அவர் பேசிய காட்சிப் பதிவையும் அதில் இணைத்திருந்தார்
எதிர்க்கட்சித் தலைவர் என்பது வலிமையான ஜனநாயகக் கருவி! ராகுல் காந்தி கருத்து
Leave a Comment