புதுடில்லி, ஜூன் 30 அமெரிக்காவின் பருவநிலை மத்திய ஆய்வுக் கூடத்தின் விஞ்ஞானிகள் குழு நேற்று (29.6.2024) வெளியிட்ட அறிக்கை. இந்த ஜூன் மாதம் சுட்டெரித்த வெயிலின் காரணமாக இந்தியாவில் 61.9 கோடி, சீனாவில் 57.9 கோடி, இந்தோனேசியாவில் 23.1 கோடி, நைஜீரியாவில் 20.6 கோடி, பிரேசில் நாட்டில் 17.6 கோடி, வங்கதேசத்தில் 17.1 கோடி, அமெரிக்காவில் 16.5 கோடி, அய்ரோப்பிய நாடுகளில் 15.2 கோடி, மெக்சிகோவில் 12.3 கோடிமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.உலக மக்கள் தொகையில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஜூன் 16-இல் இருந்து 24 வரையிலான நாட்களில் அதீத வெப்பத்தின் தாக்கத்தை அனுபவித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
வெப்ப அதிகரிப்பால் பல நாடுகளிலும் மக்கள் பெரும் பாதிப்பு இந்தியாவில் 68 கோடி பேர் பாதிப்பு
Leave a Comment