புதுடில்லி, ஜூன்30- குஜராத் மாநிலத்தில் முழுமையான அரசு அமைப்புகளுமே ஆர்.எஸ்.எஸ் ஹிந்துத்துவ சக்திகளால் அபகரிக்கப்பட்டுள்ளன. 1992 ஆம் ஆண்டிலிருந்து துவங்கி இன்று எந்த துறையிலும் ஹிந்துத்துவா ஆதிக்கம்தான்.
அவர்களை மீறி அங்கு எதுவுமே செய்யமுடியாது.
எடுத்துக்காட்டாக குஜராத் தின் அகமதாபாத்தில் உள்ள காவல்துறை அலுவலகத்தில் குஜராத் மாநில காவல் துறையில் இணை ஆணையர் கனன் தேசாய் உள்ளிட்ட மாநிலத்தில் மிகவும் உயர் பதவியில் உள்ள காவல் அதிகாரிகள் அனைவரும் பாஜக தலைவர் ஹிமான்சு சவுகானின் பிறந்த நாளை காவல்துறை அலுவலகத்தில் வைத்து கொண்டாடுகிறார்கள்.
பாஜக தலைவர் ஹிமான்சு சவுகான் பிறந்த நாள் கேக் வெட்டும்போது,துணை ஆணையர் கனன் தேசாய் உள்ளிட்ட அதிகாரிகள் அவ ருக்கு பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் பாடி வாழ்த்துகிறார்கள்
குஜராத்தில் காவல் நிலையங்கள் அனைத் தும் பாஜக கிளை அலுவலகங்களாக மாற்றப் பட்டுவிட்டன.
பாரத் மாதாகி ஜே ஜெய் சிறீராம் முழக்கங்கள் காவல் துறை அலுவலகங்களிலும் ஒலித்து வருகின்றன. காவல் துறை அலுவலகங்களில் அரசியல் தலையீடுகள் கூடாது என்று சொல்வதற்குக்கூட குஜராத்தில் யாருமே இல்லை.
பிறந்த நாள் கொண்டாடிய ஹிமான்சு சவுகான் தேர்தலில் நின்று ஒரு கவுன்சிலராக கூட பதவியில் அமர்ந்தது இல்லை.
அவர் அப்பகுதியில் உள்ள பாஜகவின் தலைவர் அவ்வளவுதான், அவருக்கே இவ்வளவு மரியாதை கொடுக்கிறது மாநில காவல்துறை என்றால் அங்குள்ள பாஜக சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வளவு மரியாதை செய்வார்கள்.
மத்தியப்பிரதேசத்திலும் இதே நிலைதான். ஆகவே தான் மாநிலம் முழுவதும் பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக நிற்க எந்த ஒரு பிரபல எதிர்கட்சிப் பிரபலங்களும் தயங்குகின்றனர் அஞ்சுகின்றனர்.
சூரத் காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு திரும்பப்பெறவேண்டிய கடைசி நாளில் காணாமல் போகிறார். அவருக்கு சாட்சி கையெப்பமிட்டவர்கள் இது எங்கள் கையெழுத்தில்லை என்கிறார்கள்.
உடனே அவரது வேட்புமனு மற்றும் அவர் சார்பில் மனுதாக்கல் செய் யப்பட்ட மாற்று காங்கிரஸ் வேட்பாளர்கள் என இருவரின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்படுகிறது, அவர்களைத் தொடர்ந்து குஜராத் சிவசேனா, குஜராத் தேசியவாத காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் உட்பட 25 சுயேட்சைகள் தங்கள் மனுவை திரும்பப்பெற்றனர். இதனை அடுத்து சூரத் பாஜக வேட்பாளர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காந்தி நகரில் அமித் ஷாவிற்கு எதிராக போட் டியிட்ட பிரபலங்கள் அனை வருமே நேரடியாகவே மிரட்டப்பட்டனர். இதில் குஜராத் தொழிலாளர் கட்சி வேட்பாளரை காவல் துறையினர் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினரை மிரட்டி உள்ளனர். இதனால் அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வேறு பகுதிக்குச் சென்றுவிட்டனர். வேட்பாளர் உயிருக்கு அஞ்சி காட்சிப் பதிவொன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விட்டு அவர் காணாமல் போனார்.
மத்தியப் பிரதேசத்தில் உஜ்ஜைன் தொகுதியில் வேட்புமனுவை திரும்பப் பெற்ற காங்கிரஸ் வேட் பாளரை உடனே பாஜ கட்சித் துண்டைப் போட்டு அவரை பாஜகவில் இணைத் தது மட்டுமல்லாமல், அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் 1995 முதல் தொடர்ந்து பாஜக ஆட்சியில் உள்ளது. இந்த இரண்டு மாநிலங்களுமே ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட ஹிந்துத்துவ அமைப்பின் சோதனைக்களமாக அமைந்து விட்டது, இதனை ஆர்.எஸ்.எஸ் அமைப்பே ஒப்புக்கொண்டது.
தெற்கில் கருநாடகா மற்றும் ஆந்திராவை ஹிந்துத்துவ மயமாக்க பெரும் செலவு செய்து முயற்சித்துக்கொண்டு இருக்கிறார்கள் கருநாடகாவில் அவர்களது திட்டம் பலிக்க வில்லை. ஆகையால் தற்போது புதுச்சேரி மற்றும் ஆந்திராபக்கம் தங்கள் ஜாகையைத் திருப்பி உள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராட்டிராவை பெரிதும் நம்பி இருந்த ஆர்.எஸ்.எஸ் மக்களவைத் தேர்தலில் கிடைத்த தோல்வியால் அதிர்ச்சியில் உள்ளனர். ஆகையால் தான் தேர்தல் முடிவுகள் வந்து பிரதமர் பதவி ஏற்ற பிறகு மோகன் பாகவத் ஆர்.எஸ்.எஸ் அமைப் பின் முக்கிய இரண்டாம் மட்டத்தலைவர் இந்திரேஷ் மற்றும் ஆர்.எஸ்.எஸ் பிரச்சார இதழான ‘தி ஆர்கனைசர்’ எல்லாம் மோடியைத் திட்டித்தீர்த்தனர். இன்னும் இரண்டு மாதங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தன்னுடைய நூற்றாண்டு விழாவைக் கொண்டாட உள்ள நிலையில், மோடி 400 இடங்களைப் பெற்று இருந்தால் நாடாளுமன்றத்தில் காவிக்கொடியை ஏற்றி இருக்கலாம் என்ற கன வில் இருந்தவர்களின் எண் ணத்தில் மக்கள் மண் அள்ளிப்போட்டுவிட்டார்கள்.
இருப்பினும் அவர்கள் துவண்டுவிடாமல் அதிகார மய்யங்களை காவிமயமாக்கி வருகிறார்கள். இதன் ஒரு பகுதிதான் மீண்டும் ஓம் பிர்லாவை மக்களவைத் தலைவராக்கியது.
ஓம் பிர்லாவிற்கும் 400 எம்பிகள் ஏமாற்றம்! அதனால் ஏற்பட்ட ஆத்திரம் கடுமையாகி விட்டது. பதவி ஏற்ற முதல் நாளிலேயே வாழ்த்து கூறிய இளம் காஷ்மீர் மக்களைவை உறுப்பினரை (அஞ்ஞானி) புத்தி இல்லாதவர் என்றும், காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் தீபேந்திர சிங் உட்டாவை எனக்கு அறிவுரை சொல்ல நீ யார் வாயைமூடிக்கொண்டு உட்கார் என்றும் ஒருமையில் பேசி இழிவுபடுத்தினார்.
திருமாவளவன் வாழ்த்து கூற எழுந்த போது அவரது ஒலிவாங்கியை அணைத்து அவமானப்படுத்தினார்.
28.6.2024 அன்று ராகுல் காந்தி மற்றும் கார்கே பேசும் போது அவர்களின் ஒலிவாங்கியையும் அணைத்து விட்டு அவமானப்படுத்தி யிருக்கிறார்.