புதுடில்லி, ஜூன் 30- சத்ரபதி சாகு மகராஜ் 150ஆம் ஆண்டு பிறந்த நாளில் (26.6.2024), புதுடில்லியில் மகாராஷ்டிரா அரசு இல்லத்தில் (சாடன்) அமைந்துள்ள சத்ரபதி சாகு மகராஜ் சிலைக்கு தேசிய காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சாகு மகராஜ் கொள்ளுப் பேரன் சாகு மகராஜ், எம்.பி., சுப்ரியா சுலே, எம்.பி., ஓம் பிரகாஷ் ராஜ் நிம்பல்கர், எம்.பி., சுரேஷ் மாத்ரே, எம்.பி., (பல்யா மாமா) ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்வில் அகில இந்திய பிற் படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி, அமைப்புச் செயலாளர் டாக்டர் அமிர்தான்சு கலந்து கொண்டனர்.
பின்னர் சாகு மகராஜ் கொள்ளுப் பேரன் சாகு மகராஜ், எம்.பி., அவர்களை தனியே சந்தித்து, தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் சார்பாகவும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரி வித்துக் கொண்டனர். சென்னையில் ஏற்பாடு செய்யப்படும் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளையும் ஏற்றுக் கொண்டு அவசியம் வருவதாக தெரிவித்துள்ளார்.