புதுடில்லி, ஜூன் 30- சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 94ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, புதுடில்லி ரபி மார்க்கில் அமைந்துள்ள கான்ஸ்டிடியூசன் கிளப் அரங்கில் 25.6.2024 அன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றது. ஜாதிவாரி கணக்கெடுப்பு, 50 சதவீத இட ஒதுக்கீடு உச்ச வரம்பு நீக்கம், மண்டல் குழு பரிந்துரை முழு மையாக நிறைவேற்ற வேண்டும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு, வி.பி. சிங் பெயரில் டில்லியில் அமைப்பு ஆகியவற்றை வலியுறுத்தி 2ஆம் தேதிய கருத்தரங்கம் நடைபெற்றது.
விழாவில் கிரிதார் யாதவ், எம்.பி., பேராசிரியர் காஞ்ச இலயா, கோ.கருணாநிதி, பொதுச் செயலாளர், அ.இ.பிற்படுத்தப்பட்டோர் கூட்ட மைப்பு, பேராசிரியர், முனைவர் ஷெபாலிகா ஷேகர், ஆய்வாளர் ஜே.கயல்விழி, நியூஸ் வீக் ஆசிரியர் சுமித் சவுகான் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
சுனில் சர்தார் தலைமையிலான சத்திய சோதக் பன்னாட்டு அமைப்பு மற்றும் இளைய குமார் தலைமையிலான திராவிடர் மாண வர்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய விழாவில் பேராசிரியர் அரவிந்த் குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.