புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் காங்கிரசை எதிர்த்துப் போட்டியிட்ட பி.ஜே.பி. யைச் சார்ந்த நமச்சிவாயம், காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கத்திடம் தோல்வி அடைந்தார். தோல்வியை ஒப்புக்கொள்ளும் நேர்மையின்றி, ராசி பலன், ஜோதிடப் பொந்துக்குள் நுழைந்து புலம்புகிறார்.
தேர்தல் வெற்றி – தோல்விக்கு மக்களின் வாக்களிப்பு என்கிற ஜனநாயகக் கோட்பாடு இல்லாதவர்கள், இப்படிப் பேதலிப்பதைப் பார்த்தால் பரிதாபம்தான் படவேண்டும்.
இவர் சொல்லியிருப்பதைப் பார்த்தால், ராசி பலன் – ஜோதிடம் பார்த்து வெற்றி – தோல்வியை அறிவித்துவிடலாமே!
அஷ்டம சனி இவருக்கு மட்டுமா? நட்டா, மோடி முதலிய பி.ஜே.பி.யினர் எல்லோருக்கும்தான்!