சென்னை, ஜூன் 29– சட்டமன்றத்தில் பேரவைத் துணைத் தலைவர் பிச் சாண்டி சிங்கம்-கொசு குட்டி கதையை கூறினார்.
சட்டமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர் பிச்சாண்டி (கீழ்பென்னாத்தூர்) தொழில் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசினார்.
அப்போது அவர் குட்டிகதை ஒன்றை கூறினார். அப்போது அவர் பேசிய தாவது:- காட்டில் சிங்க வேடம் போட்ட விலங்கு ஒன்று தனிக்காட்டு ராஜாவாக வாழ்ந்து வந்தது. அது தனக்கு அபார வலிமை இருப்பதாக நினைத்து தற்பெருமை கொண்டு காடெல்லாம் சுற்றி வலம் வந்து, அங்கிருந்த சிறு விலங்குகளையெல்லாம் அஞ்சி நடுங்க வைத்துக் கொண்டிருந்தது.
“இறைவா எதற்கும் அஞ்சி நடுங்கும் சின்னஞ் சிறு விலங்காகவோ, கொசுவாகவோ நீ என்னை படைக்காமல் எல்லா விலங்குகளும் பறவைகளும் என்னை பார்த்து அஞ்சி நடுங்கும் சிங்கமாக படைத்துள்ளாய் உனக்கு நன்றி!” என உரத்த குரலில் காடெல்லாம் எதிரொலிக்கும் வண்ணம் பேசியது. இதைக் கேட்ட கொசுக்கள் “சிங்கமே” கொசுக்களாகிய நாங் கள் உன்னை விட வலிமை யானவர்கள், இதை அறிந்து அடக்கமாக பேசு” என்றது.
இதைக் கேட்ட சிங்கம் “அற்ப கொசுவே யாரிடம் என்ன பேச்சு பேசுகிறாய், நான் நினைத்தால் ஒரே கையில் 400 கொசுக்களை பிடித்து விடுவேன், உன் கூட்டத்தையே அழித்து விடுவேன்” என இறுமாந்தது. அதற்கு “சிங்கமே நம்மில் யார் வலிமையானவர்கள் என் பதை சண்டை போட்டு முடிவு செய்யலாம்” என்று சொன்னது.
நீங்கள் “என்னிடம் சண்டைக்கு வருகின்றீர் களா, வாருங்கள் நொடியில் உங்களை வீழ்த்துகிறேன் என்று கர்ஜித்தது. கொசு வேகமாக பறந்து வந்து சிங்கத்தின் முகத்தில் கடித்தது.”
உடனே, சிங்கம் தன் முன்னங்காலால் முகத்தில் வேகமாக அறைந்தது, கொசு தப்பித்து சிங்கத்தின் உடலில் வலது பக்கம், இடது பக்கம், பின்பக்கம் என எல்லா இடத்திலும் கடித்தது. நிதானம் இழந்த சிங்கம் கோவம் கொண்டு புலம்பியபடி கடித்த இடங்களிலெல்லாம் காலால் அறைந்தது. இதனால் சிங்கத்தின் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டு சோர்வடைந்து படுத்தது. அருகில் வந்த கொசு, இனிநான் தான் பெரியவன் என்று எண்ணி யாரையும் எளியவர் என்று கேலி செய்யாதே என்று புத்தி புகட்டியது. இதற்கும் இன்றைய அரசியல் நடப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும், 400 இடங்கள் என்றார்கள், என்ன ஆனது? எல்லோருக்கும் தெரியும்.
-இவ்வாறு அவர் பேசினார்.