புதுடில்லி, ஜூன் 29 நீட் முறைகேடு விவகாரத்தால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவா் சோ்க்கை தாமதமாகி வரும் நிலையில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படை யில் நடைபெறும் பிற மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை ஜூலை மாதம் தொடங்க மக்கள் நல்வாழ்வுத் துறை முடிவு செய்துள்ளது.
இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: நீட் முறைகேடு விவகாரத்தில் நீதிமன்றம், ஒன்றிய அரசு உரிய முடிவு எடுத்த பிறகுதான் மாணவா் சோ்க்கை தொடா்பான அறிவிப்பு வெளியிடப்படும். எனவே, முதலில் பி.எஸ்சி. நா்சிங், பி.பார்ம். போன்ற துணை மருத்துவ படிப்புகள், யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை ஜூலை மாதத்தில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா். துணை மருத்துவப் படிப்புகளைப் போன்றே கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கும் ஜூலையில் கலந்தாய்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.