(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)
எது பொய்யான பரப்புரை?
கவிஞர் கலி.பூங்குன்றன்
ரூபாய் 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும், இல்லையெனில் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கோயம்புத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர், பிரதமர் மோடி மற்றும் அவர் அறிவித்த திட்டங்கள் குறித்து பேசினார். இதற்கு தமிழ்நாடு பாஜகவினர் தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்ட மன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜூன் 9ஆம் தேதி திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தால் சிலருக்கு எரிச்சல், ஆத்திரம், பொறாமை ஏற்பட்டிருக்கிறது. அதனால் வாய்க்கு வந்தபடி எல்லாம் விமர்சிக்கிறார்கள். “2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு ஒரு நபருக்கு ரூ. 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார். ஆனால், ரூ. 15 கூட தரவில்லை” என, பிரதமர் மோடி பேசாத ஒன்றை, அப்பட்டமான பொய்யை கூறியிருக்கிறார்.
2014 மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டால், ஒவ்வொரு இந்தியருக்கும் ரூ. 15 லட்சம் கொடுக்கும் அளவுக்கு இருக்கும் என்றார். ஊழல் அரசியல்வாதிகளும், அவர்களின் பினாமி தொழிலதிபர்களும் பதுக்கிய பணத்தின் அளவை, மக்களுக்கு புரிய வைப்பதற்காகவே அவ்வாறு அவர் பேசினார். ஆனால், இந்த உண்மையை திட்டமிட்டு மறைத்து விட்டு, இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் வழங்குவதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார் என, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் மக்களிடம் பொய் நிறைந்த தகவலை பரப்பி வருகின்றனர்.
2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பும், இந்த கட்டுக்கதையை பரப்பி மக்களை ஏமாற்ற நினைத் தார்கள். ஆனால், மக்களிடம் அது எடுபடவில்லை. 2014இல் 282 தொகுதிகளில் வென்ற பாஜக, 2019இல் 303 தொகுதிகளில் வென்றது. ரூ. 15 லட்சம் தருவதாக பிரதமர் மோடி வாக்களித்தார் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், திமுக அமைச்சர்களும், தலைவர் களும் தொடர்ந்து கட்டுக்கதையை பரப்பி வருகின்ற னர். முதலமைச்சரின் மகனும் அமைச்சருமான உதயநிதியும் இந்தப் பொய்யான தகவலை திரும்பக் கூறி வருகிறார்.
முதலமைச்சர், அமைச்சர் போன்ற முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் ஒரு பொய்யை திரும்பத் திரும்பக் கூறி வருவது கடும் கண்டனத்திற்குரியது. இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் வழங் குவேன் என பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதி யும் வெளியிட வேண்டும். இல்லையெனில் தாங்கள் பேசிய பொய்யான கருத்திற்கு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி ரூ. 15 லட்சம் தருவேன் என வாக்குறுதி அளித்ததும் உண்மை; அதை ஜூம்லா என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதும் உண்மை.
குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திரமோடி அவர்கள் 2013 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் காங்கர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு இது. பத்தாண்டுகள் ஆகிவிட்டன. “இந்தியாவின் மோசடிப் பேர் வழிகள் கருப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் டெபாசிட் செய்கிறார்கள். அந்தப் பணத்தைத் திரும்பக் கொண்டு வந்தால், ஒவ்வொரு ஏழை இந்தியனும் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை இலவசமாகப் பெறுவான். பா.ஜ.க. வெற்றி பெற்றால் கறுப்புப் பணத்தை மீட்போம்” என்று பேசினார் அன்றைய முதலமைச்சர் நரேந்திரமோடி
2015 பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆனது. ஓராண்டின் முடிவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் கேட்டது என்னவென்றால், ‘ரூ.15 லட்சம் தருவதாகச் சொன்னீர்களே? என்ன ஆச்சு?’ என்பதுதான். ‘அப்படியா? நாங்கள் அப்படிச் சொல்லவில்லையே!’ என்று பிரதமர் மோடி சொல்லவில்லை. இந்தக் கேள்வி நேரடியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர் களிடம் கேட்கப்பட்டது. அவரும், ‘நாங்கள் அப்படி எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை’ என்று சொல்ல வில்லை. மாறாக, ‘பொய்யாக அப்படி வாக்குறுதி அளித்தோம்’ என்பதை அப்போதே அமித்ஷா ஒப்புக் கொண்டார்
2015 ஆம் ஆண்டு ஏ.பி.பி. ஊடகத்துக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டியில், ” தேர்தல் தந்திரமாக அப்படிச் சொன்னோம். இது ஒரு உருவகம் தான்” என்று கூறினார். 2.6.2015 அன்று ‘எக்கனாமிக் டைம்ஸ்’ நாளேடு வெளியிட்ட செய்தி இதுதான். BJP president Amit Shah has said Narendra Modi’s ‘promise’ as the party’s PM candidate that each Indian would receive Rs 15 lakh when black money would be repatriated from abroad was an ‘idiom’ and should not be taken literally Although the ‘promise’ was never realistic, the new interpretation suggests that BJP was looking for a way to wriggle out after being accused by political opponents of reneging on its poll promise. It may also indicate the difficulty the government was facing to repatriate black money from foreign shores.
Shah’s remarks came in response to a question during an interview to a news channel. “Modiji’s statement was an idiomatic expression (jumla) that was given during the Lok Sabha polls. Everybody knows that this black money doesn’t go to accounts of people,” Shah said. During the Lok Sabha election campaign, Modi had often said if NDA comes to power it will ensure that Indian black-money invested illegally in tax havens abroad would be brought back to and this fund would be distributed to the poor, ith each one getting Rs 15 lakh in their accounts – என்பது ஆகும்.
‘ரூ.15 லட்சம் தருவதாக நாங்கள் சொன்னது உண்மை தான். ஆனால் அது “ஜும்லா” என்று சொன்னவர் அமித்ஷா. ஜூம்லா என்ற ஹிந்தி – உருதுச் சொல்லுக்குப் பொய்யான வாக் குறுதி, பொய்யான வாக்கியம், வெற்றுச் சொல் என்று பொருள்.
இன்னொரு முக்கியமான அமைச்சர் நிதின் கட்கரியிடம் இதே கேள்வி கேட்கப்பட்டது. ‘நாங்கள் அதிகாரத்துக்கு வரமாட் டோம் என்று நினைத்து அப்படிச் சொல்லி விட்டோம். ஆனால் வந்து விட்டோம், என்ன செய் வது?’ என்று பதில் அளித்தார் அவர். (10.10.2018 அன்று இப்படிச் சொன்னார்) ஒன்றிய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே. ”ரிசர்வ் வங்கியில் அவ்வளவு தொகை இல்லாததால் எங்களால் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடிய வில்லை. விரைவில் ரூ.15 லட்சம் தந்து விடுவோம்” என்று 19.12.2018 அன்று வெளிப்படையாகவே செய்தி யாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் கேள்விகளுக்கு அருண் ஜெட்லி பதில் அளித்த போது ”கருப்புப் பணம் தொடர்பான விசாரணையில் இதுவரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டு வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட 3,250 கோடி ரூபாய் தான் கண்டுபிடிக் கப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி உள்ள கருப்புப் பணம் முழுவதுமாக மீட்டுக் கொண்டு வரப்பட்டால் இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 15 லட்சம் ரூபாய் கிடைக்கும் என தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி கூறினார்.
அந்தப் பேச்சானது வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் தொடர்பாக வெளியான பல மதிப்பீடுகளின் அடிப்படையில் உத்தேசமாக சொல்லப்பட்டதாகும்.” என்று கூறினார். (2015 மார்ச்) ஒன்றிய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, அமித்ஷா, நிதின் கட்கரி, ராம்தாஸ் அத்வாலே ஆகி யோர் ஒப்புக் கொண்டதுதான் – ரூ.15 லட்சம் தருவோம் என்பது ஆகும்.
இந்த உண்மைகள் ஆதாரப்பூர்வமானவை. பிஜேபி ஒன்றிய அமைச்சர்களால் ஒப்புக் கொள்ளப் பட்டவை.
மக்கள் எல்லாம் ஏமாளிகள், கொடுத்த வாக்குறுதிகளை எளி தில் மறைத்துவிடலாம் அல்லது மக்கள் மறந்து விடு வார்கள் என்று வானதிகள் வானத்தில் கோட்டை கட்ட ஆசைப்பட்டால் அவமானப்படுவதுதான் நிச் சயம்.
முதல் அமைச்சர் தவறான தகவ லைக் கூறுகிறார் – அதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறும் பா.ஜ.க.மகளிர் அணி தலைவர், நாம் எடுத்துக்காட்டியுள்ள ஆதாரப் பூர்வமான தகவல்களைத் தைரியமாக மறுக்கட்டுமே பார்க்கலாம்.
மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூட நாம் கேட்கவில்லை; காரணம் ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி வகையறாக்களுக்கு மன்னிப்பு சர்க் கரைப் பொங்கல் ஆயிற்றே!