நிதின்கட்கரி ஆலோசனை
புதுடில்லி, ஜூன் 27- சாலை முறையாகப் பராமரிக்கப்படாமல், மோசமாக இருக்கும் இடங்களில் சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று நெடுஞ் சாலைகளைப் பராமரிக்கும் நிறுவ னங்களுக்கு ஒன்றிய அமைச்சா் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.
செயற்கைக்கோள் உதவியுடன் வாகனங்களைக் கண்காணித்து சுங்கச் சாவடி கட்டணத்தை வசூ லிக்கும் திட்டம் தொடா்பான பன் னாட்டு பயிலரங்கு டில்லியில் நேற்று (26.6.2024) நடைபெற்றது. நெடுஞ்சாலைகளைப் பராமரிக்கும் நிறுவனங்களும் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில்
ஒன்றிய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் கட்கரி பேசியதாவது:
நடப்பு நிதியாண்டில் 5,000 கி.மீ. தொலைவுள்ள சாலைகளில் செயற்கைக்கோள் உதவியுடன் சுங் கக் கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்படும். சாலைகள் சிறப்பாக உள்ள இடங்களில் மட்டும் தான் சுங்கக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.
சாலை முறையாகப் பராமரிக்கப்படாமல், மோசமாக இருக்கும் இடங்களில் சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்கக் கூடாது. எந்த இடத்திலும் சேவை சிறப்பாக இருந்தால் மட்டும் உரிய கட்டணம் செலுத்த வேண்டும். சேவை முறையாக இல்லாவிட்டால் கட்டணம் தேவையில்லை. குண்டும், குழியுமாகவும், சேறு நிறைந்ததாகவும் சாலைகளை வைத்துக் கொண்டு அங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க முற்பட்டால், மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.
முன்னதாக, டில்லியில் நடை பெற்ற நிகழ்ச்சியில் பேசிய கட்கரி, ‘நெடுஞ்சாலைகளைக் கட்டமைக்க மொத்த திட்டத் தொகையில் ஒன்றிய அரசு 40 சதவீதத்தை அளிக்கிறது. மீதமுள்ள தொகையை ஒப்பந்ததாரா்கள் முதலீடு செய்கிறார்கள்.
2023-2024ஆம் ஆண்டில் சுங்கச்சாவடி கட்டணமாக ரூ.64,809.86 கோடி வசூலாகியது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 35 சதவீதம் அதிகம். தற்போதைய சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு செயற்கைக்கோள் உதவிவுடன் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்பட்டால் மேலும் ரூ.10 ஆயிரம் கோடி வரையில் சுங்கச் சாவடி கட்டண வசூல் அதிகரிக்கும்’ என்றார்.