சென்னை, ஜூன் 27- ஜூன் 30ஆம் தேதிக்குள் இந்தப் பதிவுகளை நீங்கள் முடிக்காவிட்டால் அரசிட மிருந்து இலவச உணவு அட்டையின் பலன்களைப் பெறமுடியாது.
ஏழை, எளிய மக்களுக்காக அரசு தரப்பில் பல்வேறு திட் டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களில் பல உணவு வழங்கல் துறையால் நடத்தப்படுகின்றன. அரசின் பல திட்டங்கள் மூலம் ஏழை, எளி யோருக்கு இலவச குடும்ப உணவு அட்டை வசதி வழங்கப்படுகிறது. உணவு அட்டை உள்ள குடும்பங் களுக்கு மட்டுமே ரேஷன் உதவிகள் கிடைக்கும்.
தற்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் உணவு வழங்கல் துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் கீழ், அனைத்து குடும்ப அட்டை வைத்திருப்பவர்களும் புதுப்பிக்க வேண்டும். இல்லையென்றால் ரேஷன் கார்டில் அவர்களுக்கு கிடைத்து வரும் பலன்கள் நின்று விடும். எனவே உடனே இந்த வேலையை முடிப்பது நல்லது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசின் திட்டத்தின் கீழ் இலவச பொருள்கள் வழங்கப்படுகிறது. இதற்கு அரசு ரேஷன் விநியோக மய்யத்தில் இருந்து ரேஷன் கார்டை காண்பித்தால் மட்டுமே பொருள்கள் கிடைக்கும்.
ஆனால் இப்போது உணவு வழங்கல் துறை அனைத்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களும் சரிபார்ப்பை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதற்கான கடைசி தேதி 2024 ஜூன் 30 என உணவு வழங்கல் துறை நிர்ண யித்துள்ளது.
இந்த தேதிக்குள் யாராவது சரி பார்ப்பை முடிக்கவில்லை என்றால் குடும்ப அட்டை மூலம் வழங்கப்படும் இலவச பொருள் கள் திட்டத்தின் பலன்களை அவர்களால் பெற முடியாது.
குடும்ப அட்டையில் பெயர் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் செய்து கொள்ள வேண் டும். ஏனெனில், குடும்ப அட்டையில் பலன் பெற தகுதியில்லாத பலர் உள்ளனர். எனவே, சரிபார்ப்பு அவசியமாக்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டையில் சரி செய்ய உங்கள் அருகில் உள்ள ரேஷன் கடைக்குச் செல்ல வேண்டும். அதன் பிறகு அங்குள்ள ரேஷன் டீலரை சந்திக்க வேண்டும். கடையில் இருக்கும் பிஓஎஸ் மெஷினில் உங்கள் கைரேகையை பதிவைக் கொடுக்க வேண்டும்.
குடும்பத் தலைவரின் கைரேகை மட்டுமல்லாமல், ரேஷன் கார்டில் உள்ள அனைத்து குடும்ப உறுப் பினர்களும் தங்கள் கைரேகைப் பதிவை வழங்க வேண்டும்.
நாடு முழுவதும் ஒன்றிய அரசின் இலவச ரேஷன் திட் டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போதைய இந்த விதிமுறை அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். ஆனால், பயனாளிகளின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இதுபோன்ற கடுமையான விதிமுறைகள் அமல் படுத்தப்படவில்லை.
வயதானவர்கள், உடல் முடியா தவர்கள் மற்றும் பெண்களுக்கு உதவும் வகையில் கைரேகைப் பதிவு செய்ய அவகாசம் வழங்கப் பட்டுள்ளது.
குடும்ப அட்டையில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து குடும்ப உறுப்பினருக்கும் சரி பார்ப்பு செய்வது அவசியம்.
குடும்ப அட்டையில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள உறுப்பினரின் சரிபார்ப்பு செய்யப்படவில்லை என்றால் குடும்ப அட்டையில் இருந்து அவர்களுடைய பெயர் நீக்கப் படும். அதன் பிறகு அவர்களுடைய பங்கில் ரேஷன் பொருட்களை இனி வாங்க முடியாது.