10 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.க.வில் இருந்து விலகி சரத்பவார் கட்சிக்குத் திரும்பிய தேசியவாத காங்கிரஸின் முக்கியத் தலைவர்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மும்பை, ஜூன் 27– 2014ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த தேசியவாத காங்கிரஸில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் சேர்ந்த எழுத்தாளரும், அரசியல்வாதியுமான சூரியகாந்த ஜெய்வந்தராவ் பாட்டீல், பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸில் இணைந்துள்ளார்.

75 வயதான முன்னாள் ஒன் றிய அமைச்சர் சூரியகாந்த பாட் டீல் தேசியவாத காங்கிரஸில் இணைந்ததற்கு அக்கட்சியின் தலைவர் சரத்பவார், மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் மற்றும் மூத்த தலைவர்கள் தங்களது வாழ்த் துகளைத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சரத் பவார் கூறுகை யில், “சூரியகாந்தாவின் வருகை நந்தேட், ஹின்ஹூலி, பர்பானி, பீட் ஆகிய மாவட்டங்களில் கட்சி வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணை யாக இருக்கும்” என்றார்.

இவரின் மந்தமான செயல் பாடுகளால் மக்களவைத் தேர்தலில் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப் படவில்லை. அதனால், ஜூன் 22ஆம் தேதி பாஜகவில் இருந்து அதிகாரபூர்வமாக விலகினார்.

முதலில் காங்கிரஸிலும், பின்னர் ஒருங்கிணைந்த தேசியவாத காங் கிரஸிலும் இருந்த சூரியகாந்த பாட்டீல் 2014இல் பாஜகவில் இணைந்தார்.
2024இல் ஹிங்ஹூலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட விண் ணப்பித்தார். ஆனால், அந்தத் தொகுதி கூட்டணிக் கட்சியான சிவ சேனைக்கு ஒதுக்கப்பட்டது.

அந்தத் தேர்தலில் சிவசேனை (உத்தவ் அணி) சார்பில் போட்டி யிட்ட நாகேஸ் பாபுராவ், சிவசேனை யின் பாபு ராவ் ஹோகாலிகரை 1.08 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். சூரியகாந்த பாட்டீ லின் வருகை, அக்டோபரில் நடைபெறவுள்ள மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற, மகா விகாஸ் அகாதி கூட்ட ணிக்கு ஒரு வாய்ப்பை அளிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *