புதுடில்லி, ஜூன் 27 நாடாளுமன்றத் தேர்தலுக்குப்பின் நடைபெறும் முதலாவது கூட்டத்தொடரில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று (27.6.2024) உரை நிகழ்த்தினார். அவர் உரையில்,
* உத்தரப்பிரதேசம், தமிழ்நாட்டில் பாதுகாப்பு வழித்தடத்தை செயல்படுத்தி வருகிறோம்.
* பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி முன்பை காட்டிலும் 18 மடங்கு அதிகரித்துள்ளது.
* போட்டி தேர்வுகளில் வினாத்தாள் கசிவதைத் தடுக்க, கடும் தண்டனை விதிக்கும் வகை யில், புதிய சட்டத்தை அரசு இயற்றி உள்ளது.
* வினாத்தாள் கசிவு பிரச்சி னைகளைக் களைய கட்சி, அரசியலைத்தாண்டி நாம் ஒன்றிணைய வேண்டும்.
* வினாத்தாள் கசிவுகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.
* வினாத்தாள் கசிவுகளில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளி களை அரசு நிச்சயம் தண்டிக்கும்.
காசி தமிழ் சங்கம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் உள்ளிட்ட கலாச்சாரத்தை பெருமைப்படுத்தும் நிகழ்ச்சிகளை அரசு தொடங்கி உள்ளது என்று கூறினார்.
குடியரசுத் தலைவர் உரை யின்போது மணிப்பூர் விவகாரம் குறித்து பேசுமாறு எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். தொடர்ந்து நீட்… நீட்… என முழக்கமிட்டனர்.
குடியரசுத் தலைவர் உரையின்போது நீட்டை எதிர்த்துக் குரலெழுப்பிய எதிர்க்கட்சிகள்!
Leave a Comment