சென்னை, ஜூன் 27- புதுப் பிக்கத்தக்க எரிசக்தி மூலமாக தமிழ்நாட்டில் 2010ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக ஆயிரம் கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரக கூறினார்.
காப்பீட்டுத் தொகை
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று (26.6.2024) எரிசக்தித்துறை, நிதித் துறை, மனிதவள மேலாண் மைத் துறை ஆகியவற்றின் மீதான மானியக் கோரிக்கை மீது சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதம் செய்தனர். அவர்களுக்கு பதிலளித்து அமைச்சர் தங்கம் தென்னரக பேசியதாவது
அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், புதிய அளவில் சிகிச்சைகளை செய்வதற்கும். புதிய இடங்களிலே அந்த சிகிச்சை களை மேற்கொள்வதற்கான மருத்துவமனை களை உருவாக்குவதற்கும். காப்பீட்டுத் தொகையின் வரம்பை உருவாக்குவதற்கும் அரசு நடவடிக்கைகளை மேற் கொண்டிருக்கிறது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைப்பற்றி, அதற்கு மாற்றான திட்டத்தைப் பற்றி உறுப்பினர்கள் குறிப்பிட்டிருக் கிறார்கள். பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்துவது குறித்த சாத்தியக்கூறுகளை ஆய்வுசெய்து அரசுக்கு உரிய பரிந்துரைகளை அளிக்கும் வகையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, பல்வேறு பணியாளர் சங்கங்களினுடைய கருத்துகளைக் கேட்டறிந்திருக்கிறது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம் அளித்துள்ள பல்வேறு கருத்துகளின் அடிப்படையிலும் ஆய்வு செய்து அளித்துள்ள பரிந்து ரைகளின் மீதான அரசினுடைய கொள்கைமுடிவு, அரசினுடைய பரிசீலனையில் இருக்கிறது.
மின் தேவை
தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவில் மொத்த மின் தேவை 20 ஆயிரத்து 830மெ.வா. என்ற உச்சத்தை கடந்த மே மாதம் 2ஆம் தேதியன்று எட்டினோம். கடந்த 30-4-2024 அன்று 45 கோடியே 43 லட்சம் யூனிட் மின்சாரத்தை நாம் நுகர்ந்தோம். சென்னையில் அதிக பட்சமாக மின் தேவை கடந்த மே 31ஆம் தேதி 4,769 மெ.வா. ஆகவும், மின் நுகர்வானது 10 கோடியே 17 லட்சம் யூனிட் ஆகவும் வந்திருக்கிறது. ஆக 4,769 மெ.வா. சென்னையினுடைய மின் தேவை என்றால். ஒட்டுமொத்த கேரள மாநிலத்தின் மின்சாரம் தேவையும் அதுதான்.
கோடை காலத்தில் மிகப் பெரிய மின்நுகர்வு இருந்த நேரத்திலும், மிகப் பெரிய மின் தேவை இருந்த போதிலும், எந்தஇடத்திலும் தடை என்று ஏற்பட்டுவிடாமல் அனை வருக்கும் தடையற்ற ஒரு சீரான மின்சார வினியோகத்தை மின்சார வாரியம் மிகச்சிறப்பான வகையிலே இந்த முறை வழங்கியிருக்கிறது. தமிழ் நாட்டின் மொத்த நிறுவு திறன் என்பது 36 ஆயிரத்து 563 மெ.வா.ஆக இருக்கிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
பசுமை எரிசக்திக்காக ஒரு புதிய நிறுவனத்தை நாம் உரு வாக்கியிருக்கிறோம். இந்திய மாநி லங்களை எல்லாம் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில்தான் மின்வெட்டு என்பதே இல்லாமல் மிகச் சிறப் பாக இருக்கக்கூடிய மாநிலம் என்ற சான்றை ஒன்றிய அரசு வழங்கி யுள்ளது. தமிழ்நாடு 19 ஆயிரத்து 628 மெகாவாட் புதுப்பிக்கத்தக்கக்கூடிய எரிசக்தி உற்பத்தியில், இந்தியாவில் 3ஆவது இடத்தில் இருக்கிறோம்.
2023-2024ஆம் ஆண்டில் மட் டும் 1994 மெகாவாட் அளவை கூடுத லாக நிறுவியிருக்கிறோம். சூரிய மின் சக்தியை பொறுத்தமட்டில், நிறுவு திறன் 8145.53 மெகாவாட்டுடன் இந்திய அளவில் 4ஆவது இடத் தில் இருக்கிறோம். 2023-2024ஆம் ஆண்டில் மட்டும் நிறுவப்பட்ட திறன் 1,462,635 மெகா வாட்டாக இருக்கிறது. காற்றாலை உற்பத்தியைப் பொறுத்தமட்டில், தமிழ்நாடு 10,590.68 மெகாவாட் நிறுவுத் திறனுடன் 2ஆவது இடத்திலே தமிழநாடு இருக்கிறது.
2030ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 10 ஆயிரம் கோடி யூனிட்களை புதுப்பிக்கத்தக்க எரி சக்தி வாயிலாக தமிழ்நாடு அரசு உற்பத்தி செய்வதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும்.
– இவ்வாறு அவர் பேசினார்.