குஜ­ராத், பீகார் மாநி­லங்­களை மய்ய­மாக வைத்தே நீட் மோச­டி­கள்! ராஷ்­டி­ரிய ஜனதா தளம் குற்­றச்­சாட்­டு!

1 Min Read

புதுடில்லி, ஜூன் 26- குஜ­ராத், பீகார் மாநி­லங்­களை மய்ய­மாக வைத்தே நீட் மோசடிகள் அரங்­கேறி இருப்­ப­தாக ராஷ்­டி­ரிய ஜனதா தளம் கட்­சி­யின் மூத்த தலைவர் மனோஜ்குமார் ஜா குற்றம்சாட்டியுள்­ளார்.
ராஷ்­டி­ரிய ஜனதா தளம் கட்­சியின் மூத்த தலை­வ­ரும், மாநி­லங்­­­க­ளவை உறுப்பினருமான மனோஜ்­கு­மார் ஜா வெளி­யிட்­டுள்ள சமூக வலை­தள பதி­வில்,
நாடு முழு­வ­தும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்­ளிட்ட குளறு படிகள் அனைத்தும் குஜ­ராத், பீகார் மாநி லங்­களை மய்ய­மாக வைத்தே அரங்கேறி இருப்பதாக குற்­றம்­சாட்­டி­யுள்ளார்.
மேலும் பீகா­ரில் பா.ஜ.க. அய்க்கிய ஜனதா தள கூட்­டணி அரசு நீட் முறை கேட்டில் தொடர்­பு­டைய குற்றவாளி களை பாது­காப்­பதாகவும் புகார் தெரி வித்துள்ளார்.

பல்­வேறு முறை­கே­டுகள் அரங்­கே­றிய இள­நிலை மருத்­து­வப் படிப்­பிற்­கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்­டும் என்­றும் மனோஜ்­கு­மார் ஜா வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.
ஒன்­றிய அரசு மாண­வர்­க­ளின் எதிர்கா­லத்­து­டன் விளை­யாட முடியாது என்று தெரி­வித்­துள்ள அவர், தேசிய தேர்வு முகமை ஒரு மோசடி நிறு­வ­னம் என்­றும், அந்த அமைப்பு கலைக்­கப்­பட வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.
மேலும், ஒன்­றிய அர­சால் வினாத்தாள் கசி­வின்றி ஒரு தேர்­வைக்­கூட நடத்த முடியாது என்­றும், ஒன்­றிய அரசு முழுமை­யாக தோல்வி அடைந்து விட்ட தா­க­வும் விமர்­சித்­துள்­ளார்.
மேலும், நீட் தேர்வு குள­று­படி களுக்கு பொறுப்­பேற்று ஒன்­றிய அரசு, மாணவர்களிடம் மன்­னிப்பு கேட்க வேண்­டும் என்­றும் மனோஜ்­கு­மார் ஜா தெரிவித்துள்­ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *