10 ஆண்டுகளாக இந்தியா அறிவிக்கப்படாத அவசர நிலையில் தான் உள்ளது: கார்கே

2 Min Read

புதுடில்லி, ஜூன் 26 நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக ‘அறிவிக்கப்படாத அவசரநிலை’ அமலில் உள்ளது என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டார்.
கடந்த 1975, ஜூன் 25 ஆம் தேதி அப்போதைய பிரதமா் இந்திரா காந்தியால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதை முன்வைத்து, காங்கிரஸ் கட்சியை பிரதமா் மோடி கடுமையாக விமா்சித்த நிலையில், அவருக்கு கார்கே பதிலடி கொடுத்துள்ளார். இது தொடா்பாக கார்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
நாடு எதிர்காலத்தை நோக்கியுள்ள சூழலில், தனது அரசின் தோல்விகளை மறைக்க கடந்த காலம் குறித்து பேசுகிறார் மோடி.
‘அறிவிக்கப்படாத அவசரநிலை’ என்றால் என்ன என்பதை கடந்த 10 ஆண்டுகளில் 140 கோடி இந்தியா்களுக்கும் மோடி உணர வைத்துவிட்டார். இது, ஜனநாயகத்துக்கும் அரசமைப்புச் சட்டத்துக்கும் பெரும் சேதத்தை விளை வித்துள்ளது.

கட்சிகளை உடைப்பது; மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, பின்வாசல் வழியாக கவிழ்ப்பது; எதிர்க்கட்சித் தலைவா்களை குறி வைத்து, அமலாக்கத் துறை, சிபிஅய், வருமான வரித் துறை போன்ற விசாரணை அமைப்புகளைத் தவறாக பயன்படுத்துவது; முதலமைச்சர்களை சிறையில் அடைப்பது; தோ்தல்களுக்கு முன் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி, போட்டிக் களத்தை சீா்குலைப்பது இவையெல்லாம் ‘அறிவிக்கப்படாத அவசரநிலை’ இல்லையா?
கருத்தொற்றுமை, ஒத்துழைப்பு குறித்து பேசும் பிரதமா் மோடி, அதற்கு நோ்மாறாக செயல்படுகிறார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 146 போ் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நேரத்தில், மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை நிறைவேற்றியது ஏன்?
எதிர்க்கட்சிகளிடம் எந்த ஆலோச னையும் நடத்தாமல், நாடாளுமன்ற வளாகத்தில் தலைவா்கள் சிலைகள் இடமாற்றம் செய்தது ஏன்?
பணமதிப்பிழப்பு, பொது முடக்கம், தோ்தல் நன்கொடை பத்திரங்கள் என பல்வேறு விஷயங்களில் மோடி அரசு கருத்தொற்றுமையை கோரவில்லை.

சொந்த கட்சித் தலைவா்களையே இருட்டடிப்பு செய்யும் மோடி, எதிர்க்கட்சிகளை எவ்வாறு நடத்துவார்? பல தருணங்களில் ஜனநாயகத்தையும், அரசமைப்புச் சட்டத்தையும் பாஜக அவமதித்துள்ளது. அதேநேரம், ஜனநாயகம் மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் பக்கம் எப்போதும் நின்றது காங்கிரஸ்தான். இனியும் அதைத் தொடா்வோம் என்று கார்கே குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *