‘சந்திர’சந்திரயான்’ பெயர் சூட்டப்பட்ட குழந்தைகள்

1 Min Read

அரசியல்

புவனேஷ்வர், ஆக. 26 – இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது சந் திரயான்-3 விண்கலத்தின் லேண்டரை வெற்றிகரமாக நிலவில் இறக்கியது. இதனால் விண் வெளிதுறையில் இந்தியா சரித்திர சாதனை படைத்துள்ளது.

நிலவின் மேற்பரப்பில் செயற் கைகோள் இறங்கிய நேரத்தில் ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்ட மருத்துவமனையில் பிறந்த 3 குழந்தைகளுக்கு ‘சந்திரயான்’ என பெயரிடப்பட்டது. ‘விக்ரம்’ லேண்டர் மெதுவாக தரையிறங்கி சாதனை படைத்ததை நினைவுகூரும் வகையில் ஒரு பெண் குழந்தை உள்பட 4 குழந்தைகளுக்கு ‘சந்திரயான்’ என்னும் பெயரை பெற்றோர்கள் சூட்டி உள்ளனர்.

 அமெரிக்காவிலும் கூகிள் உள்ளிட்ட இணையதளங்கள் பிரபலமானபோது குழந்தைக ளுக்கு கூகிள், பிரவுசர், வெப், ஸ்க்ரோல் என்று பெயர் சூட்டி அழைத்தனர். சமீபத்தில் வாட்ஸ் அப் நிறுவனத்தின் நெதர்லாந்து இயக்குநரின் பெயர் கூகிள் டே ஆகும். காரணம் கூகிள் இளைய தளம் உருவாக்கிய அன்று அவர் பிறந்தார். 

 நாசாவின் வெப் விஷன் கடந்த ஆண்டு புதிய கண்டுபிடிப் புகளைத் தந்தது, முக்கியமாக சிக்னஸ் விண்வெளிமண்டலம் மற்றும் பல்வேறு கேலக்ஸி குளுஸ்டர் (பால்வெளிமண்டங் களின் தொகுப்பை) கண்டுபி டித்து படமாக அனுப்பியது. அப்போது கலிப்போர்னியாவில் பிறந்த பல குழந்தைகளுக்கு ஜேம்ஸ், அர்மிடா, அண்ட்ரோ மீடா, சிக்னஸ் ஆல்பா சிக்னஸ் என்று பெயர் சூட்டில் மகிழ்ந் தனர். 

இந்தக்குழந்தைகள் பெரிய வர்கள் ஆன பிறகு தங்களின் பெயர்களுக்குப் பின்னால் இருக்கும் வரலாறு தெரிந்து தனது பெயரின் மகத்துவத்தை உணர்ந்து அவரகளும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு காரண மாக இருப்பார்கள்.  

இப்படி அறிவோடு சிந்திக் கக்கூடாது என்பதற்காகத்தான் வடமொழியில் புரியாத பெயரை இங்கே தொடர்ந்து பார்ப்பனர்கள் பரிந்துரை செய்துகொண்டே இருக்கின்றனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *