நாடாளுமன்றத்திற்கு மீண்டும் வந்த கனிமொழி கருணாநிதி, தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி, மஹுவா மொய்த்ரா, சுப்ரியா சுலே ஆகியோர். 2019 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான 17ஆவது நாடாளுமன்ற காலகட்டத்தில் அதிகமாக பேசப்பட்டவர்கள். அவமானப்படுத்தப்பட்டவர்கள்.பதவிநீக்கம் செய்யப்பட்டவர்கள் அத்தனை அவமானங்களையும் கடந்து மீண்டும் நாடாளுமன்றம் சென்றுள்ளார்கள். மேலே உள்ள பெண் உறுப்பினர்கள் அனைவரும் இனி நாடாளுமன்றத்திற்கு வரக்கூடாது என்று அப்போதைய ஒன்றிய இணை அமைச்சர் சாமியாரிணி நிரஞ்சனா ஜோதி நாடாளுமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டத்தில் பேசி இருந்தார். ஆனால் அவரே தனது தொகுதியான பதேபூரில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் நரேஷ் சந்திராவிடம் படுதோல்வி அடைந்தார். சாமியாரிணி நிரஞ்சனா ஜோதி
2014-2019 மற்றும் 2019-2024 என இரண்டு காலகட்டத்திலும் இணை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வரக் கூடாது என்று சொன்னவர் வரவில்லை வரக்கூடாது என்று சொல்லப்பட்டவர்கள் நாடாளுமன்றம் வந்தனர்

Leave a Comment