சத்தியமங்கலம், ஆக. 26 ஒன்றிய அரசை கண்டித்து தொடர்ந்து 3 நாட்கள் தொடர் மறியல் போராட்டம் நடைபெறும் என்று சத்தியமங்கலத்தில் இரா.முத்தரசன் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்த ரசன் நேற்று (25.8.2023) ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- பிரதமர் மோடி 9 ஆண்டுகளாக ஆட்சி செய்கிறார். ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாக சொன்னார். ஆனால் நிறைவேற்றவில்லை. பல லட்சம் இளைஞர்கள் வேலை இழந்தது தான் மிச்சம்.
வெளிநாட்டில் பதுக்கி வைக் கப்பட்டுள்ள பணத்தை மீட்டு ஒவ்வொருவருக்கும் வங்கிக் கணக் கில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்றனர். ஆனால் 15 பைசா கூட போடவில்லை. பெட்ரோல், டீசல் விலையையும் உயர்த்திவிட்டனர். அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறிவிட்டது. மணிப்பூர் கல வரம் தேசத்தையே உலுக்கி விட்டது. கருநாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டா லும், நமக்கு சேர வேண்டிய தண்ணீரை கருநாடகம் தர மறுக்கிறது. பிரதமர் மோடி எங்கு பேசினாலும் மக்களுக்கு தேவை யான நல்ல திட்டங்களை பற்றி பேசாமல், குடும்ப அரசியல், லஞ்சம், ஊழல் குறித்து மட்டுமே பேசு கிறார். அதற்கு அவருக்கு தார்மீக தகுதி கிடையாது.
நமக்கு கிடைத்த முதல்-அமைச்சர் மிகவும் பக்குவப் பட்டவர். ஒன்றிய அரசு அறிவித்த எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற வில்லை, எனவே ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 12, 13, 14-ஆம் தேதி என 3 நாட்கள் தொடர் மறியல் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது பவானிசாகர் தொகுதி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செய லாளர் மோகன்குமார், தொழிற் சங்க தலைவர் ஸ்டாலின் சிவக் குமார், ஒன்றிய செயலாளர்கள் சுடர் நடராஜன் உள்பட பலர் உடனிருந்தனர்.