வாசிங்டன், ஆக. 26 – அமெரிக்காவில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் (வயது 77) 2017ஆ-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார். 2021ஆ-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை மறைக்க ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்தது உள்பட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
மேலும் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஜார்ஜியா மாகாண தேர்தலில் இவர் தோல்வியைத் தழுவினார். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்றனர். இதனால் டிரம்ப் உள்பட 19 பேர் மீது தேர்தல் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட 19 பேரையும் ஒரே நேரத்தில் விசாரிக்க ஜார்ஜியா மாகாண நீதிமன்றம் முடிவு செய்தது. இதனால் குற்றப் பத்திரிகையில் உள்ள அனைவருக்கும் பிடி யாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேசமயம் 25ஆம் தேதிக்குள் (25.8.2023) தாமாக முன்வந்து ஆஜராகவும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி நேற்று (25.8.2023) ஜார்ஜியாவில் உள்ள அட் லாண்டா சிறைக்கு டிரம்ப் தாமாக முன்வந்து சரணடைந்தார். இத னால் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் அங்கு திரண்ட தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பலத்த பாதுகாப்புடன் அவர் சிறையில் ஆஜர் செய்யப்பட்டார்.
சிறையில் ஆஜரானதும் அவ ரது அங்க அடையாளங்கள் குறிக் கப்பட்டு கைதி எண்ணும் வழங்கப் பட்டது. பின்னர் ரூ.1 கோடியே 65 லட்சம் பிணைத் தொகையாக வழங்கப்பட்டதால் டிரம்ப் சிறை யில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் சுமார் 22 நிமிடங்கள் சிறையில் இருந்தார்.
இதனையடுத்து சிறையில் இருந்து வெளியேறிய டிரம்ப் நியூ ஜெர்சி மாகாணத்துக்கு தனி விமானத்தில் புறப்பட்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறுகையில், `தான் கைதான இந்த நாள் அமெரிக்க வரலாற்றில் கருப்பு நாள்’ என தெரிவித்தார்.
அமெரிக்க வரலாற்றிலேயே குற்றவியல் வழக்குகளை சந்தித்த முதல் அதிபர் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024) பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால் இது டிரம் புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
அதிபர் தேர்தலுக்கான போட் டியில் முன்னணியில் இருப் பதாலேயே அவர் மீது இது போன்ற அவதூறு வழக்குகள் தொடரப்படுவதாக டிரம்பின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டு கின்றனர்.