மூடத்தனத்தின் மறுவடிவம் தான் பிரதமர் மோடியா? வெற்றிகரமாக இறங்கிய இடத்திற்குப் பெயர் சிவசக்தியாம்!

1 Min Read

 பெங்களூரு,ஆக.26  நிலவில் லேண்டர் விண்கலம் தரையிறங்கிய இடத்துக்கு ‘சிவசக்தி பாயின்ட்’ (‘Shiv Shakti Point’) எனப் பெயர் சூட்டப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித் துள்ளார். 

சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்கு காரணமான இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்துவ தற்காக பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டில் இருந்து நேர டியாக இன்று (26.8.2023) காலை பெங்களூரு வந்தார். பெங்களூ ருவில் உள்ள இஸ்ரோ மய்யத் துக்குச் சென்றார். அப்போது விஞ்ஞானிகள் அனைவரையும் பிரத மர் வெகுவாகப் பாராட்டினார். பிரதமர் மோடிக்கு லேண்டர் எடுத்தப் ஒளிப்படங்கள் பரிசாக வழங்கப்பட்டன. பிரதமரிடம் லேண்டர் விண்கலனின் மாதி ரியை திட்ட இயக்குநர் வீரமுத்து வேல் வழங்கினார். அவருக்கு பிரதமர் மோடி கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தார். 

பின்னர் அங்கு விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “நிலவில் கால் பதித்த 4-ஆவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடின உழைப் புக்கும், அர்ப்பணிப்புக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டின் பெருமையை, கவுரவத்தை நாம் உலகத்துக்கே நிரூபித்துள்ளோம். லேண்டர் தரையிறங்கிய இடம் இனி ‘சிவ சக்தி பாயின்ட்’ என்றழைக்கப்படும். நிலவில் லேண்டர் தரையிறங்கிய தினம் (ஆக.23) ஆண்டுதோறும் தேசிய விண்வெளி நாளாகக் கொண்டாடப்படும்” என்றார். 

கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவில் சந்திரயான்-2 லேண்டர் விழுந்து நொறுங்கிய இடத்துக்கு ‘திரங்கா பாயின்ட்’ எனப் பெயர் சூட்டப் படுகிறது என்று பிரதமர் தெரிவித்தார். ராமர் கோவில் விவ காரத்தால் சிவனைக் கும்பிடுப வர்களை சமாதானம் செய்ய என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்த போது விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கிய வாய்ப்பை பயன்படுத்தி சிவசக்தி என்று பெயர் வைத்து விட்டார்.    ஆனால் விழுந்து நொறுங் கிய இடத்திற்கு “தேசியக்கொடி மய்யம்” என்று பெயர் வைத்தது நாட்டை சிறுமைப்படுத்தத்தான்…. இதுதான் இவர்களது  தேசபக்தி!!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *