தமிழ்நாட்டில் 8.3 7 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

viduthalai
2 Min Read

சென்னை, ஜூன் 24- தமிழ்நாட்டில் வெளி மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளர்களில் 8.37 லட்சம் பேர் அரசு இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்துள்ளனர். இந்தத் தகவலை தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் தெரிவித்தார்
சட்டப் பேரவையில் 22.6.2024 அன்று கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் வி.பி. நாகை மாலி (கீழ்வேளூா்) எழுப்பினார் அதற்கு அமைச்சா் சி.வி.கணேசன் அளித்த பதில்:

தமிழ்நாட்டில் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில், இதுவரையிலும் வெளி மாநிலங்களைச் சோ்ந்த 2 ஆயிரத்து 660 பேர் உறுப்பினா்களாகப் பதிவு செய்துள்ளனா். அவா்களுக்கு கல்வி, மகப்பேறு, திருமணம், விபத்து மரணம், இயற்கை மரணம், இறுதி நிகழ்வு போன்றவற்றுக்கு நிதியுதவிகள் அளிக்கப்படும்.

மேலும், பணியின் போது இறக்கும் தொழிலாளா்களின் உடல்களை அவா்களது சொந்த ஊருக்கு விமானம் அல்லது ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லவும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவாக அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
விவரங்கள் பதிவு:

வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளா்கள் தங்களது விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மாவட்ட அளவில் தொழிலாளா் நல அலுவலகங்கள், தொழிலக பாதுகாப்பு துறை அலுவலகங்கள், அனைத்து மாவட்ட நிர்வாக அலுவலகங்கள், வேலை அளிப்போர் ஆகி்யோர் மூலமாக இந்தப் பதிவை மேற்கொள்ள வேண்டும்.

அதன்படி, இதுவரையிலும் வெளி மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளர்களில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 540 போ் தங்களது விவரங்களைப் பதிவு செய்துள்ளனா் என்று தெரிவித்தார்.

பீகாரில் ஆசிரியர்
வாரியத் தேர்வும் ஒத்திவைப்பு

பாட்னா, ஜூன் 24- மோடி அரசு கட்டுப்பாட்டில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகள் அனைத்தும் முறைகேடு நிகழ்வுகளால் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில், பாஜக கூட்டணி ஆளும் பீகார் மாநிலத்தில் ஆசிரியர் வாரிய தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில கல்வி வாரியம் வெளியிட்ட அறிக்கையில் ஜூன் 26, 28இல் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் வாரிய தேர்வு ஒத்தி வைப்பது தொடர்பாக பாஜக கூட்டணி ஆளும் பீகார் மாநில அரசு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *