வில்லிவாக்கம் – பூம்புகார் நகர் கழகத் தோழர் சா.இராசேந்திரனின் வாழ்விணையர் சாந்தியின் மூத்த சகோதரியார் ஜனாபாய் (வயது 68) 25.8.2023, காலை 8 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகி றோம். நேற்று பிற்பகல் 3 மணிக்கு, வட சென்னை மாவட்ட கழக பொதுக்குழு உறுப்பினர் தி.செ.கணேசன், செம்பியம் கழக தலைவர் ப.கோபாலகிருட்டிணன், மாவட்ட திராவிடர் கழக தொழிலாளரணி செயலாளர் க.சுமதி, மங்களபுரம் மு.டில்லிபாபு, வெண்ணிலா கிஷோர் ஆகியோர் ஜனாபாய் உடல் மீது மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். நேற்று மாலை 6 மணிக்கு மக்காராம் தோட்ட இடுகாட்டில் இறுதி நிகழ்வு நடை பெற்றது.