யுஜிசி – நெட் தேர்வு ரத்தானதைத் தொடர்ந்து இன்று (23.6.2024) நடக்கவிருந்த மருத்துவ முதுகலைப் பட்டத்துக்கான நீட் தேர்வு திடீரென்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு ரத்து என்றுசொன்னால், புரிந்துகொள்ள முடியும். நீட் உண்டு; ஆனால், இன்று நடக்காது, ஒத்தி வைக்கப்படுகிறது என்றால், இந்தத் திடீர் முடிவுக்குக் காரணம் என்ன?
இந்தத் தேர்விலும் வினாத்தாள் கசிந்துவிட்டதா?
இன்று தேர்வு – நேற்று ரத்து என்று அறிவித்தால், இதனால் தேர்வு எழுதுவோருக்கு எத்தகைய மன உளைச்சலும், சங்கடமும் ஏற்படும்.
இதுதான் பி.ஜே.பி. அரசின் இலட்சணமா?